புத்தகத்தின் பெயர் : 20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள் |
விலை : ரூ.60 |
எழுத்தாளர் : சபீதா ஜோசப் |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in |
20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்' எனும் நூலில் பிரபலங்கள் 20 பேரிடம் 50 கேள்விகளை முன்வைத்து, மொத்ததில் 1000 பதில்களை அவர்களிடமிருந்து பெற்று நம் கண்முன் வைத்துள்ளார் நூலாசிரியர் சபிதா ஜோசப். 'டி-சினிமா'வில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் இவர், இதுவரைக்கும் 30-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் சினிமா சம்பந்தப்பட்ட நூல்கள் 10-க்கும் மேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் பதில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம்மை கவர்ந்திழுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
|