First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழர் மாநாட்டிற்காக லண்டன் செல்லவிருந்த வைகோவிற்கு விசா மறுப்பு - பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டு சேரவாய்ப்பு - 100 நாட்களில் தீவிரவாதிகளை அடக்க சிறப்பு தனிப்படை: மன்மோகன்சிங் - தமிழக காவல்துறையை கண்டித்து சென்னையில் அதிமுக மாபெரும் போராட்டம் - கருணாநிதிக்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது
தொடர் 1
கலைஞர் மு. கருணாநிதி
1924. சூன் 3 திருவாரூரை அடுத்த திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் இவருக்கு மகனாகப் பிறந்தார்.
1930. திருக்குவளை தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார்.அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை சட்டாம் பிள்ளையாக விளங்கினார்.
1936. திருவாருர் உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பில் கூட சேர்த்துக்கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்தார். இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் குதித்து உயிரை விட்டு விடுவேன் என்று கூறியது மட்டுமன்றிக் குதிக்கவும் முனைந்தார். படிப்பில் அவருக்குள்ள ஆர்வம் கண்டு 5 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க இசைவு அளிக்கப்பட்டது. முதல் போராட்டத்தின் முதல் வெற்றி இது.
1938. இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம், நாள்தோறும் மாணவர்களைக் கூட்டிக் கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி, கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார்.
1939. பள்ளியில் நடைப்பெற்ற சொற்போட்டியில் நட்பு என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம்தான் சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம் அமைத்து வாரந்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்து வந்தார். அப்போதே மாணவர்களிடையே வாரச் சந்தா வசூலித்து அமைப்பு ரீதியாக செயற்பட்டார்.
1940 மாணவர் ஒற்றுமைக்கெனத் தனி அமைப்பு ஏற்படுத்தி வாரந்தோறும் கூட்டாயம் நடத்தினார்.
1941. தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் தொடங்கி, இதன் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் மாநிலத்திலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார். இதே ஆண்டில மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்க மாணவர் நேசன் எனற் மாத இதழைக் கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்
1942. தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடிப் பேராசிரியர் அன்பழகன், கே,ஏ, மதியழகன் ஆகிய அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப் பாட்டு உணர்ச்சிக் கவியாக அமைந்தது. இந்நிகழச்சியின்போது நிதிப் பற்றாக்குறைக்காகக் கைச்சங்கிலியை அடகு வைத்து சமாளித்தார். இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு மூன்றாவது இதழில் இளமை பலி என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாருரில் நடைப்பெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைத் தந்த அறிஞர் அண்ணா அவர்கள் இளமை பலி கட்டுரை எழுதிய கலைஞரை சந்திக்க விரும்பி அவரை அழைத்துவரச் செயது போட்டோல் சந்தித்து இந்த ஆண்டில் தான் கலைஞரின் எழுத்தாற்றலை அன்றே அண்ணா புகழ்ந்தார்கள். இதே ஆண்டில்தான் முரசொலி வெளியீட்டுக் கழகம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கி மாத இதழாக முரசொலி இதழை வெளியிட்டார். அதில் சேரன் என்ற புனைப் பெயரில் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.
28.5.1944 திருவாருர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் பழனியப்பன் என்ற சிர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். ஆரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்து மிகச் சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்துகொணடு ஆவேசமாகப் பேச தலைப்பட்டார்.
1944. திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் பழனியப்பன் நாடகத்தை நடத்தி அதில் முக்கிய பாத்திரமேற்று நாடெங்கும் கருப்புகொடி ஊர்வலுமும், கழகத் தோழர்கள் இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றிடவும் செய்தார்
1945. கல்யாணசுந்தரம் ஆகியோருடன் வந்துக் கொண்டிருந்தவரை ஒரு பெருங்கூட்டம் வளைத்துக்கொண்டது. மற்ற இருவரும் தப்பிவிட்டனர். கலைஞர் அகப்பட்டுக்கொண்டார். சிவகுருவை விடாதே நாடகத்தில் அவர் நடித்த பாத்திரத்தின் பெயரால் அழைத்து அவரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்துவிட்டவரை இறநதுவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முசுலீம் போன்று மாறுவேட் அணிந்து பெரியாரிடம் சென்றார். பெரியார் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தனனுடன் அழைத்துச் சென்று குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.
1945.மதுரை சட்ட எரிப்புப் போராட்ட வழக்கு.
1946. திராவிடர் கழகக் கொடிக்கு மாதிரி அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்திற்குத் தன் இரத்தத்தைப் பயன்படுத்தினார் - முதன்முதலாகக் கொடிக்குத் தன் குருதியைக காணிக்கையாக்கினார். இராஜகுமாரி திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதிக் கொடுத்தார்.
1947. முரசொலி வார இதழை அச்சில் வெளியிட்டார்
1948. திருவையாற்றில் கருப்புக் கொடிப் போராட்டம்
1949. சேலம் மாடர்ன் தியேட்டரில் கலைப்பணித் தொடக்கம். அங்கே கலைவாணரின் சந்திப்பும், அவருடன் நெருங்கிய நட்பும் வளர்ந்தது.
9.7.1949. பெரியார், மணியம்மை திருமணம் காரணமாகத் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டது.
17.9.1949 திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது.
18.9.1949 சென்னை பவளக்காரத் தெருவில் நடந்த தி.மு.க. அமைப்புக் கூட்டத்தில் பொதுக்குழு, பிரச்சாரக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1950- திருச்சியில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம்.

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter