|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் மீது வழக்கு - சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி ஆஸ்பத்திரியில் அனுமதி - மத்திய மந்திரி நாராயணசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் அனுப்பினார் - கொழும்பு உயர் நீதிமன்றம் முன் ரணில் விக்கிரமசிங்க உண்ணாவிரதம்
எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.

ஜெயலலிதா! சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பெண் சிங்கம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாது எதிர்கொள்ளும் ஆற்றலை இவர் நடிகையாக இருந்தபோதே பெற்றவர். கன்னட வெறியர்களால் சூழப்பட்டபோது கூட தமிழை விட்டுக் கொடுக்காத தைரியசாலி. கடந்த முறை இவருடைய ஆட்சியில் திரையுலகுக்காக பல வசதிகளும் நன்மைகளும் செய்து தரப்பட்டது.
கருணாநிதி! இவருடைய தமிழ் கேட்டு கோடம்பாக்கத்திற்கு வண்டியேறிய ஜாம்பவான்கள் நிறைய! ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதிய பெருமை இவருக்குண்டு. தமிழறிஞர்கள் அனைவருமே வியந்து போற்றக்கூடிய மூதறிஞர். இவர் முதலமைச்சராக இருந்தபோதும் தமிழ்த்திரையுலகம் பெற்ற பலன்கள் ஏராளம். படப்பிடிப்பில் இறந்துபோகும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்கப்படும் என்று அறிவித்தவர். ஒரு வசனகர்த்தாவாக இவர் ஆற்றிய தொண்டு தமிழ்த்திரையுலகம் பெற்ற பெறும் பேறு!

சிவாஜி கணேசன்

சிவாஜி! இந்தியாவில் பிறக்காமல் எங்கு பிறந்திருந்தாலும் உலகம் போற்றக்கூடிய விருதுகளை அள்ளிக் குவித்திருப்பார் என்று பல அறிஞர்களால் போற்றப்பட்ட பிறவி நடிகர். நடிகர் திலகம் என்று தமிழ் பெருமக்களால் ஆராதிக்கப்படும் அற்புத கலைஞன். அவ்வப்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தாலும், தன் ஒவ்வொரு வினாடிகளையும் சினிமாவுக்காக அற்பணித்தவர். நூற்றாண்டு கடந்து வாழும் புகழுக்கு உரித்தானவர்.
ரஜினிகாந்த்! ஒரு சமானியனாக சினிமாவிற்கு அறிமுகமானவர். தன் வேகமான ஸ்டைல் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பால் ஈர்த்தவர். தமிழ்சினிமா இதுவரை பார்த்திராத வியாபாரம், விநியோகஸ்தர்கள் இதுவரை பெற்றிராத லாபம், அனைத்தும் ரஜினியின் ஸ்டைலுக்கு கிடைத்த வெற்றி! அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் அவர் இருந்தாலும், வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு கொண்டிருப்பவர். சாமியாராகிவிடுவார் என்றும் இவர் குறித்து எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவருடைய படப்பட்டியல்தான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது....

ரவீந்தநாத் தாகூர் சத்யஜித்ரேயை தனது சாந்திநிகேதனில் கலாபவனில்கலைத்துறையில் சேர்த்து கல்வி கற்பித்தார். இந்திய கலைத்துறையின் ஒப்பற்ற பேராசிரியர்நந்தலால் போஸிடம் மாணவனாக இருந்துகல்வி கற்றார். சாந்தி நிகேதனில் தன்னுடைய கல்வி முடிவடைவதற்கு முன்னரே கொல்கத்தா வந்துவிட்டார்.

``குரல்ல பிசிரு அடிக்குது...
இது ஒலிப்பதிவுக்குச் சரியா வராது’’
-அழியாத அதிசயம் டி.எம்.சௌந்தரராஜன் வாழ்வில்...
Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter