கலக்கப்போவது ஆறு!-திக் திக் திக் தீபாவளி! பில்லாவும், பீமாவும் சற்றே ஒதுங்கிக் கொள்ள, போட்டியில் குதித்திருக்கும் படங்கள் மொத்தம் ஆறே ஆறு! அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன், கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், ஆக்ரா ஆகிய படங்கள்தான் அவை. 'தில்லு இருந்தா மல்லுக்கட்டு' என்று முண்டா தட்டுகிற படங்களுக்கு நடுவில், புதுமுகங்கள் நடித்திருக்கும் ஆக்ராவும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியதே! வலிமையானவர்களை பிறகு பார்ப்போம். நாம் எப்போதும் எளிமையானவர்களின் கட்சி!.........