|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

மாஞ்சா வேலு
Goripalayam - Movie

ஓராயிரம் பேர உருட்டி தள்ளிட்டு, நாலாயிரம் பேர நசுக்கி தள்ளிட்டு ஒரே ஒருத்தி கழுத்தில தாலி கட்ற மாஞ்சா வேலுங்கிற நல்லவனோட கதைதான் இது. ஹீரோ என்பவன் அதிபராக்கிரமம் கொண்டவன்னு காட்ட வேண்டியதுதான். அதுக்காக யானைய நசுக்கி எலி புழுக்கையாக்கிடுவாரோன்னு அஞ்ச வைக்கிற அளவுக்கா காட்றது? வுடுங்க... இது மையமான ரசிகருங்கள மனசுல வச்சு எடுத்த படம் போலிருக்கு! முன்னாடி வந்த 'மலை மலை' நல்லாதான போச்சு. அந்த லிமிட்டுக்கு எதுக்கு 'ரிவிட்டு' வைக்கணும்?

அண்ணன் அசிஸ்டென்ட் கமிஷனர். அப்பா டி.வி நிருபர். அந்த வீட்டு வாரிசுதான் அருண்விஜய். இவருக்கும் தன்ஷிகாவுக்கும் காதல். அதே நேரத்தில ஏ.சி.பி யான கார்த்திக்குக்கும் வில்லன் வாகை சந்திரசேகருக்கும் மோதல். நடுவில் தலையை கொடுக்கிற தம்பி அருண், சந்திரசேகரை தவிடு போல ஊதி தள்ளுகிறார். வில்லன் மேல கைய வச்சவன் நிம்மதியா இருந்ததா ஒரு சினிமா வந்திருக்கா? போலீஸ் கமிஷனர் கார்த்திக் மீது 100 கோடி சிட்பண்ட் பணத்தை கையாடினார் என்று பழி சுமத்தப்படுகிறது. அப்படியே அவரை பிணமாக்கி எரிக்கவும் முயல்கிறார் சந்திரசேகர். காப்பாற்றப்பட்ட பின்பும் இறந்து போகும் அண்ணனுக்கு கொள்ளி வைத்துவிட்டு, வில்லனுக்கும் சங்கு ஊதுகிறார் அருண் விஜய் என்பதோடு முடிகிறது படம்.

ஒவ்வொரு படத்திலும் தனது வேகத்தையும் நடிப்பையும் கூட்டிக் கொண்டே போகிறார் அருண்விஜய். இந்த படத்தில் கொஞ்சமாக காமெடி செய்யவும் முயன்றிருக்கிறார். சொந்த வீட்டிலேயே யாரோ போல வந்து தன்ஷிகாவை ஏமாற்றுவது லேசான சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அண்ணனை பறிகொடுத்துவிட்டு அழுது புலம்புகிற இடங்களில் தியேட்டர் கப்சிப். சண்டை காட்சிகளில் ஒவ்வொரு பில்டிங்காக தாவி பறக்கிறபோது பிரமிக்க வைக்கிறார் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், 'கிராபிக்சுடா....' என்று சாதாரண ரசிகன் கூட நொன்னை காமெண்ட் அடித்துவிட்டு போகிற காலமய்யா இது! இது மாதிரி விழல்களுக்கு ஓவராக நீர் இறைக்கணுமா அருண்?

கதாநாயகி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டதால் ஒரு பாராவை வேஸ்ட்டாக ஒதுக்க வேண்டியிருக்கிறது தன்ஷிகாவுக்கு! நான்கு கைகள் இணையும் ஒரு குளோஸ்-அப்பில் அருண் கை எது? தன்ஷிகாவுடையது எது என்ற குழப்பம் வராமலில்லை. நியாயமாக பார்த்தால் முதல் காட்சியில் வருகிற காமெடியன் சாம்ஸ் கூட இணைத்து வைக்கப்பட வேண்டிய அளவுக்கு சுமார் ஃபிகர்!

ஹீரோவாகவே நடிக்கலாம். பிரமிக்க வைத்திருக்கிறார் கார்த்திக். ஒருகாட்சியில் சந்தானம் சொல்கிறார். 'வாயில கொஞ்சம் தண்ணிய ஊத்திட்டு பேசு. உங்கண்ணன் குரலு வரும்' என்று. நியாயம்தான். தண்ணீரை போலவே நீக்கமற நிறைந்துவிட்டார் அந்த ஏசிபி பாத்திரத்தில்!

நீண்டகாலம் கழித்து செமத்தியான கேரக்டர் வாகை சந்திரசேகருக்கு. விட்டேனா பார் என்று விழுந்து மேய்ந்திருக்கிறார். இவரை தவிர்த்து படத்தில் இன்னும் சிலர். முக்கியமாக லொள்ளு மனோகர், சந்தானம் இருவரும். ஒரு காட்சியில் மனோகரையே சந்தானம் அடுப்பாக்கி எரியவிடுவதையும், சம்போ சிவ சம்போ பின்னணியில் பஸ்சில் ஏற்ற வேண்டிய ஜோடியை விட்டு விட்டு, கூட வரும் ஷகிலாவை ஏற்றிவிட்டு முழிப்பதையும் ஆரவாரத்தோடு கொண்டாடுகிறது தியேட்டர்.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பிரபுவின் மிடுக்கு, லவ்லி! படத்தில் வரவேற்கப்பட வேண்டிய புதுமுகம், கார்த்திக்குமார். விஞ்ஞான அறிவையும் வில்லத்தனத்தையும் குழப்பி கும்மியடித்திருக்கிறார் மனுஷன். அப்படியே கோடம்பாக்கத்துல கண்ட்டினியூ பண்ணுங்க பிரதர்.

ஒரு ஊருக்கே மசாலா அரைத்திருக்கிறார் டைரக்டர் ஏ.வெங்கடேஷ். ஆனாலும் குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக அப்ளாஸ் தரலாம் இவருக்கு. வெட்டப்பட்ட கார்த்திக்கை போலீசிடமிருந்து மறைப்பதற்காக ஊர்வலத்தில் வரும் உருவ பொம்மையாக்குகிறார்களே, சபாஷ்!

இசை மணிசர்மா. திகட்ட திகட்ட தெலுங்கு வாசனை.

சி சென்ட்டரை குறி வைத்திருக்கிறார்கள். அது நெடில் ஆகிவிட்டதுதான் சோகம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter