|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

கொல கொலயா முந்திரிக்கா
Goripalayam - Movie

'பொட்டக் கோழி எட்டிக் கொத்தாது'ன்னு ஒரு பழமொழி இருக்கு. இதை பழமொழியை 'பழைய' மொழியாக்கியிருக்கிறார் மதுமிதா! கிரேஸி மோகனின் சதாப்தி வேக நகைச்சுவைக்கு தண்டவாளம் அமைத்துக் கொடுப்பதே பெரிய வேலை. அதை திறம்பட செய்திருக்கிறது மதுமிதாவின் திரைக்கதை!

ஜமீன் வீட்டிலிருக்கும் நாலு சேர்களில் ஒன்றில் வைரக்குவியல். நாலும் நாலு இடங்களில் பிரிந்து கிடக்க, எதில் வைரம்? எங்கே சேர்கள்? தேடி செல்லும் ஒரு திருடா திருடியின் கதைதான் இது. இருபது வருடங்கள் கழித்து நடக்கும் இந்த சேசிங்கில் ஜமீன் பரம்பரையில் மிச்சமிருக்கும் ஆனந்தராஜ் அண் கோவும் சேர்ந்து கொள்ள, முடிவை நோக்கி ஒரு 'கெக்கே பிக்கே' பயணம்! சிரிப்புதான் மோட்டிவ் என்பதால் லாஜிக்கை மென்று தின்கிறது ஒவ்வொரு சீனும்!

நகை அபேஸ் பண்ணும் முதல் காட்சியிலேயே எம்.எஸ்.பாஸ்கர் ஸ்கோர் பண்ண ஆரம்பித்துவிடுகிறார். பிரமாதமான காரில் வந்திறங்கும் அவர், அடுத்த காட்சியிலேயே ஷிகாவுடன் ஓட்டை சைக்கிளில் சவாரி போவது குலுங்க வைக்கும் சிரிப்பு. இந்த சிரிப்போற்சவத்தை க்ளைமாக்சில் வரும் கோர்ட் சீன் வரைக்கும் தக்க வைத்துக் கொள்கிறார் மனுஷன்.

ஷிகாவும், கார்த்திக்கும் முதலில் எதிரெதிர். ஃபிப்டி ஃபிப்டி ஷேருக்கு ஒப்புக் கொள்ளாமல் தனித்தனியாக குயிலி வீட்டிற்கு போய் நாற்காலியை களவாட முயல்வதும், அங்கே நடக்கும் சம்பாஷணைகளும் சற்றே மொண்ணை என்றாலும், போக போக சூடு பிடித்துக் கொள்கிறது லவ்வாலஜி. இவர்களின் காதலுக்கு பொருந்தமாக வந்து சேர்கிறது கண்டெய்னர் ட்ரிப். பின்னால் ஒளிந்து கொண்டே இருவரும் காதல் வளர்ப்பதும், டூயட் பாடுவதும் பக்கா கமர்ஷியல் ரூட்! அதிலும் "என்னை கெட்ட வார்த்தையா பார்க்கிற..." என்ற கிரேஸியின் புது வார்த்தை குளுமையோ குளுமை!

கண்களும், கச்சித அனாடமியும் புதுமுகம் ஷிகாவுக்கு பலத்த எதிர்காலத்தை தரும். அதென்னவோ தெரியவில்லை, கார்த்திக் குமார் மனதில் ஒட்டவே இல்லை.

அசட்டு போலீஸ் ஜெய்ராமின் 'விட்டு பிடிக்கிற' ஸ்டைல் விழுந்து சிரிக்கிற அளவு செமத்தியான ஃபார்ம்! ஒரு சில காட்சிகளே வந்தாலும் ராதாரவிக்கு தனி இடம் கிடைக்கிறது. இவரது மனைவிகளை அறிமுகப்படுத்துகிற காட்சியிலும், பஞ்சாயத்தில் இருதரப்பு நியாயத்தை கேட்டு ராதாரவி ரீயாக்ட் செய்கிற காட்சியிலும் கிரேஸியின் கிச்சு கிச்சு பிரமாதமாக வெளிப்படுகிறது. ஆயிரத்தில் ஒன்று, அல்லது ஆச்சர்யத்தில் ஒன்று. வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட ஆனந்தராஜிடம் அநாயசமான நகைச்சுவை!

கிரேஸி ஸ்பெஷலான 'முன்னாடி, பின்னாடி' இந்த படத்திலும் ஒரு முறை ரிப்பீட். ஆனால் முந்தைய சுவை கொஞ்சமும் குறையாமல்.

க்ளைமாக்சில், தானே ஜட்ஜ் ஆக அமர்கிறார் கிரேஸி மோகன். தனது செவிட்டு மிஷினை சுத்தியலால் நசுக்கிவிட்டு ஒரு உத்தேசமாகவே கேஸை கையாள்வது அவருக்கேயுரிய ஸ்மைல் கிரவுண்ட்!

செல்வகணேஷின் இசை பெரியளவுக்கு செவியின்பத்தை தரவில்லை என்றாலும், ஒரு பாடல் நிம்மதி. (ஒரு வரம்...)

முந்திரிக்கா சமையலில் உப்பு புளிப்பு எக்கு தப்பா இருந்தாலும், சிரிப்பின் அளவு கூடுதல் என்பதால் அபரிமித ருசி!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter