|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
விமர்சனம்

கற்றது களவு
Goripalayam - Movie

தாலியை கட்டினோமோ, தனியறையில் படுத்தோமா என்று ஒதுங்க நினைக்கும் காதல் ஜோடியை டெல்லியிலிருந்து வந்திருக்கும் ஸ்பெஷல் போலீஸ் விரட்டுகிறது. மறிச்சு நிக்கிற மத யானை வெறிச்சு பார்க்கிற மாதிரி உள்ளூர் போலீஸ் அதிகாரி சம்பத்தும் இன்னொரு பக்கம் கேம் நகர்த்த, முடிவு என்ன? 'நல்லாதான்யா இருக்கு படம்'னு பின்புறத்தை தட்டிகிட்டே நடையை கட்டுது ஜனம்! காரணம் கதையில இருக்கிற கனம்!

அந்த திருட்டு கல்யாண ஜோடிங்க கிருஷ்ணாவும் விஜயலட்சுமியும். காதல் ஜோடிய போலீஸ் விரட்ட வேண்டிய அவசியம் என்ன? கட் பண்ணி கட் பண்ணி ஒரு பிளாஷ்பேக். தனியாகவே ஒரு பேங்க் நடத்த திட்டமிடும் கிருஷ்ணா ஒரு சூப்பர் பிளானோடு பேங்க் அதிகாரி சந்தான பாரதியை சந்திக்க, அந்த திட்டத்தை திருடிக் கொள்ளும் அவர், பெயரையும் புகழையும் தட்டிக் கொள்கிறார். இது என் ஐடியாடா என்று கூக்குரல் இடும் கிருஷ்ணாவை புடைத்து எடுக்கிறார்கள். திருட்டை திருட்டால அடிப்போம்னு நினைக்கிற கிருஷ்ணா, விஜயலட்சுமி உதவியுடன் அதே சந்தான பாரதியின் எக்கச்சக்க பணத்தை கொள்ளையடிக்கிறார்.

எப்படி இவருடன் சேர்ந்தார் விஜயலட்சுமி? அதற்கும் ஒரு பிளாஷ்பேக். வீட்டிலிருந்து வெளியேறும் விஜியும், கிருஷ்ணாவும் 'ஏரியாவுக்கொரு திருட்டு. எக்கச்சக்கமாய் சுருட்டு' என்ற கொள்கையை பரப்பி, கொள்ளையை நடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் மந்திரி ஒருவரின் பணத்தையே கொள்ளையடிக்க, அவரால் ஏவப்படும் அதிகாரிகள்தான் விரட்டுகிறார்கள் இந்த ஜோடியை! திருட்டு தொழிலை விட்டு விட்டு திருமண வாழ்வை மேற்கொள்ள நினைக்கும் இவர்களின் முடிவில் குறுக்கிடும் போலீஸ் அதிகாரி வென்றாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கிருஷ்ணாவின் கிராஃப் ஏறியிருக்கிறது. நன்றாக ஆடுகிறார். நடிக்கிறார். ஆனால் என்னவோ மிஸ்சிங்... (மீசை?) இருவேறு எண்ணமுள்ள போலீஸ் அதிகாரிகள், பொட்டு ரவுடி ஆகிய மும்முனை கும்பலுக்கு நடுவே இவர் தப்பித்து ஓடுகிற காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவை. நகைக்கடை அதிபரை ஏமாற்றுகிற காட்சியெல்லாம் பச்ச புள்ளைக்கு காட்டுகிற பஞ்சு மிட்டாய் ரகம். இவரது கெட்டப் மாற்றமும், டயலாக் டெலிவரியும் தனியாக ரசிக்கப்பட வேண்டியவை.

ஐயோ பாவம் விஜயலட்சுமி. உடம்பை கொஞ்சம் ஏத்தினா நடிப்பை எதிர்பார்க்காம ரசிக்கவாவது செய்யலாம். இருக்கிற எட்டு கிலோ எலும்பை வைத்துக் கொண்டு விதவிதமான கெட்டப்புகளோடு திரியுது பொண்ணு. அதுக்கே தனி தில் வேண்டும். போலீஸ் அதிகாரிகளான சம்பத்தும், டான்ஸ் மாஸ்டர் கல்யாணும் கம்பீரத்திற்கு பஞ்சமில்லாமல் நடிக்கிறார்கள். அதிலும், கல்யாண் போடுகிற திட்டங்களை தவிடு பொடியாக்கும் சம்பத்தின் யுக்தி செம க்யூட். ஆனால் இவர்கள் இருவருடைய மூளையையும் செல்லாக் காசாக்குகிற கிருஷ்ணாவின் தந்திரம்தான் ஸ்பெஷல் நம்பர் ஒன்.

பால்ஜேவின் இசையில் ஒரு பாடல் இனிமை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ராமேஸ்வரத்தின் அமானுஷ்யத்தை பந்தி வைக்கிறது. அலை முழங்கும் கடற்கரையில் நடக்கும் சேசிங், நீர் மட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில ஷாட்கள் பிரமிப்பு.

கற்றது களவு, கண்ணுக்கு நிறைவு!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter