|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

குரு சிஷ்யன்
Rettaisuzhi - Movie

சத்யராஜ் முத்தல் என்பதால் குரு. சுந்தர் சி கொஞ்சம் இளசு என்பதால் சிஷ்யன். கள்ளும் போதையுமாக இருக்க வேண்டிய இந்த குரு சிஷ்யர்கள் ஒரு கட்டத்தில் எதிர் எதிராக திரும்பி நிற்க, ஏன்...னு நம்மகிட்டயே கேட்டுட்டு இடைவேளை போடுகிறார் டைரக்டர் ஷக்தி சிதம்பரம். ஏனாம்?

சத்யராஜுக்கு சுந்தர்சி மச்சினர். சின்ன வயசில ஊரை விட்டு ஓடிப்போன அந்த தம்பி, வளர்ந்து பெரியவராக வந்து நிற்கும்போது அக்காவுக்கும் மாமாவுக்கும் விரிசல், கிழிசல், உடைசல், உறுமல்! அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல, அக்காவை ஒருவேளை சோறு கூட உழைச்சு திங்க விடாதபடி கொலை வெறியோடு துரத்துகிறார் மாமா. இந்த நேரத்தில் நைசாக மாமாவிடமே அல்லக்கையாக அப்பாயின்ட்மென்ட் ஆகும் சுந்தர்சி, ஒரு கட்டத்தில் அப்படியே திருப்பிக் கொள்கிறார். இருவருக்கும் நீயா, நானா? போட்டி. முடிவில் அக்காவையும் மாமாவையும் இணைத்து வைத்து, பிரிவுக்கு காரணமான வில்லனுக்கு பால் ஊற்றி சுந்தர் சி போடுவது சுபம்!

வந்தீங்களா, சிரிச்சீங்களான்னு போகணும். லாஜிக் பற்றி பேசினா சத்யராஜ் கட்டியிருக்கும் பனிரெண்டு வண்ண லுங்கிய கிழிச்சு உங்களையும் கட்ட வைப்பேன்கிற ரேஞ்சில் மிரட்டியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். சொன்ன மாதிரி சிரிப்புக்கு முழு கியாரண்டி! ஏற்கனவே இளிப்பு. இதில இன்னும் கொஞ்சம் வலிப்புங்கிற மாதிரி சந்தானமும் சேர்ந்து கொள்கிறாரா? புண்ணாகி போகிறது வயிறு. ஆர்த்தியை பூட்டி வைத்த ரூம் சாவியை புலி தின்று வைக்க, அதை கைப்பற்ற முயலும் சந்தானத்தின் முயற்சி குலுங்க வைக்கிறது தியேட்டரை. அது மட்டுமா, பரதநாட்டிய டிரஸ்சில் அவர் படுத்துகிற பாடும், அடிக்கடி சரிபண்ணி கொள்ளும் அந்த கொட்டாங்குச்சி லொகேஷனும் பயங்கரம்டா சாமிய்...

அதென்னவோ தெரியவில்லை, விஜயகாந்த்தையும் அவரது கட்சியையும் உண்டு இல்லை என்று நக்கலடித்திருக்கிறார் சத்யராஜ். இன்னும் எத்தனை படத்திலதான் ஒரே டயலாக்கை சொல்லி போரடிக்கப் போகிறாரோ? (என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே?)

காதலியை கலாய்ச்சதெல்லாம் போதும் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. இந்த படத்தில் காதலியின் அம்மாவையும் வம்புக்கு இழுக்கிறார்கள். ஸ்ருதி குளிக்க வருவார் என்று காத்திருக்கும் சுந்தர்சி, அவங்க அம்மா வருவதை கண்டு அதிர்வதும், அப்படியே தாங்கி பிடிப்பதும், இரண்டு பேர் பேச்சையும் வெளியே ஒரு கும்பல் நின்று டபுள்மீனிங்கில் ஒட்டுக் கேட்பதும்... அடேங்கப்பா. எங்கேயோ போயிடுச்சு தமிழ்சினிமா. பல காட்சிகளில் ஸ்ருதி-சுந்தர்சி யின் தாராளம் மென்னியை என்னவோ பண்ணித் தொலைக்கிறது. குளிர குளிர பீர் நிரப்பிய கிளாஸ் டின் போலிருக்கிறார் ஸ்ருதி. நமீதா இடத்தை அவரை 'பிடித்து தள்ளிவிட்டாவது' பிடிப்பார்.

சத்யராஜ், சுந்தர்சி இருவரும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க போடுகிற ஆட்டங்களில் சுவாரஸ்யம். சரண்யா வழக்கம்போல கலக்கல். ரவிகாளே டிபிக்கல் வில்லன். அவ்வளவே!

இசை தினா. உறுமிமேளம் அடிச்சு சாமி வர வைக்காத குறைதான். அதே நேரத்தில் ஒரு மெலடி அற்புதம்.

இரண்டாவது பாதியில் நீளத்தை குறைத்திருந்தால், குருவையும் சிஷ்யனையும் ஒருசேர கொண்டாடியிருக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter