|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
விமர்சனம்

நாணயம்

பேங்க் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘நாணயம்’ படத்திற்கு ‘ஏதாவது போட்டு’க் கொடுக்கலாம்! அந்தளவுக்கு லாக்கரின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை ஏற்படுத்துற படம்.

வங்கி லாக்கர்களை பாதுகாக்க புது ஃபார்முலா ஒன்றை உருவாக்குகிறார் பிரசன்னா. படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர் இவர். இந்த ஃபார்முலா வொர்க் அவுட்டானால், இதுபோன்ற லாக்கர்களை உருவாக்கிக் கொடுப்பதையே ஒரு வேலையாக ஏற்படுத்திக் கொள்ளலாமே என்பது இவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் உலக்கையை போட்டு சாத்துகிறது விதி. அது என்ன என்பதுதான் விறுவிறுப்பான இரண்டரை மணி நேரம்.

ராகிணியை முதல் பார்வையிலேயே லு£ட் விடுகிறார் பிரசன்னா. (மொக்கை ஃபிகருக்கே இப்படியா?) அவரோ டைவர்ஸ் கேஸ். முதல் கணவர் யார் என்பதை கூட விசாரிக்காமல் ராகிணியோடு லவ்ஸ் விடுகிறார். நள்ளிரவில் பீச்சில் கொஞ்சி குலவும் இவர்களை போட்டு தள்ளுகிறது ஒரு கோஷ்டி. ராகிணியின் முதல் கணவர்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இவர் நினைத்துக் கொண்டிருக்க, தாக்கியது யார் என்பது க்ளைமாக்சில் தெரிகிறது. அதற்குள் வெந்நீரில் உருட்டி கண்ணீரை பிழிய வைக்கிறார்கள் பிரச்சன்னாவை.

பேங்க் லாக்கர் ரகசியம் தெரிந்தவர் இவர்தான் என்பதால், அதலிருக்கும் 300 கோடி சொத்தை லபக்க பார்க்கிறது வில்லன் சிபிராஜ் கோஷ்டி. (சத்யராஜின் நமுத்துப் போன ஸ்டைலை எப்போதுதான் விட்டொழிக்க போகிறாரோ?) முதலில் உடன்படாத பிரசன்னாவை ராகிணியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியே காரியத்தை சாதிக்கிறார்கள். திட்டமிட்டபடி லாக்கரை அடைகிற இந்த கோஷ்டி முயற்சியில் வென்றதா? முடிவு.

எக்குதப்பாக சிக்கிக் கொண்டோமே என்று பதறும் பிரசன்னா பின்பு ஒரு முடிவுக்கு வருவதும், "இரண்டு கோடி பணம் கொடுங்க" என்று கேட்டு வாங்கி அதை சேஃப்ட்டியாக பதுக்குவதும், மெல்ல மெல்ல வில்லன் கோஷ்டியின் தடியனை வழிக்கு கொண்டு வருவதுமாக மினி ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்கிறார். எல்லாம் வில்லனால் முறியடிக்கப்படுகிற போது லேசான பதற்றம் வருகிறது நமக்கும். நல்லவேளை... லாக்கரையே அவர்களுக்கு லாக்கப்பாக மாற்றும்போது விசிலடிக்க வைக்கிறார் பிரசன்னா.

எப்படியோ, மூன்று நான்கு படங்களை தாண்டிவிட்டார் ராகிணி. (ரசனை கெட்ட இயக்குனர்கள்?) கில்லியாக வந்திருக்க வேண்டிய வில்லி கேரக்டர் இது... ஹ¨ம்!

எல்லா குழப்பத்திற்கும் காரணம் இந்த திமிங்கலம்தானா? ஆச்சர்யப்பட வைக்கிறார் எஸ்.பி.பி. இவருக்கும் ஒரு சின்ன வீடு என்றால் அதுதான் செம காமெடி டைம் போங்கோ!

ஜேம்ஸ் வசந்தனின் இசையும், தமனின் பின்னணி இசையும் அழகு.

ஒரே டைப் படங்களாக பார்த்து பழகிய கண்களுக்கு புதிய இயக்குனர் சக்தி ராஜன் காட்டியிருக்கும் நாணயம் சற்றே ஆறுதல்! ஆனாலும், எட்டாம் வகுப்பு தாண்டாதவனை ஐஐடி வகுப்புக்குள் இறக்கிவிட்ட மாதிரி சில காட்சிகள் அமைந்திருப்பதுதான் "ஆவ்....!"

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter