|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
விமர்சனம்

வில்லு
Kadhalna Summa Illa

தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட அம்பு, அயல்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தீவிரவாதிகளை பஞ்சராக்குகிறது. ஏன்? 'அம்பு' யாரென்று சொல்லத் தேவையில்லை. கொலைகள் ஏனென்பதுதான் கதையின் மைய முடிச்சு.

குக்கிராமத்திற்கு வரும் நயன்தாராவை ஒரே நொடியில் மனசுக்குள் வீழ்த்துகிறார் விஜய். காதலாகி கசிந்துருகும் நயனின் உதவியோடு வெளிநாட்டுக்கு பறக்கிறார். அங்குதான் நயனின் அப்பா பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சம்பந்தம் பேசுவதற்காகதான் இந்த பயணம் என்று நாம் யோசித்தால், அடுத்தடுத்த படிகள் என ஃபாஸ்ட் ஸ்டெப் வைக்கிறார் விஜய். ஏகப்பட்ட கொலைகள். எக்கச்சக்க சண்டைகள். இறுதியாக அப்பாவை கொன்ற நால்வரை நசுக்கிவிட்டு அம்மாவின் விரதத்தை முடித்து வைக்கிறார் விஜய். நம்பி கழுத்தறுக்கிற வேடம் விஜய்க்கு. நம்பியது வில்லன்களும், கொஞ்சம் கொஞ்சம் நாமும்!

அந்த கிராமத்து எபிசோட் கலகலப்பு. கூடவே வடிவேலுவும் சேர்ந்து கொள்கிறாரா? திடுதிடுக்கிறது வயிறு. (அந்த ஹேர் ஸ்டைலை எங்கேய்யா பிடிச்சீங்க? அஹ்ஹஹ்ஹா...) காமெடிப்புயலின் கைங்கர்யம் போதும் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. கதை, விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்கு போகிறது. அங்கேயும் வடிவேலு வருகிறார். ஆனால் சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது.

அழகாக இருக்கிறார் விஜய். அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார். அந்தரத்தில் பறந்து சண்டை போடுகிறார். ரசிகர்களுக்கு இது போதும் என்று இவரே முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. கதையும், காட்சிகளும் காமிக்ஸ் ரகம். விஜயை பார்க்க விமானத்தில் வந்திறங்கும் அம்மாவை, அம்மாவே இல்லை என்று ட்விஸ்ட் அடிப்பது கதையின் கொண்டை ஊசி திருப்பம். புரட்சித் தலைவரின் பாணியே தன் பாணி என்பதை சொல்லாமல் சொல்ல சில காட்சிகளை வைத்திருக்கிறார் விஜய். தலைவரின் அம்மா சென்ட்டிமென்ட் அப்படியே வொர்க் அவுட் ஆனாலும், பிற விஷயங்களுக்கு இன்னும் தூரம் இருக்கு வாத்யாரே!

பிளாஷ்பேக்கில் வரும் மேஜர் சரவணன் கம்பீரம். விரும்பினால், மேஜராகவே ஒரு படத்தில் நடிக்கலாம் விஜய்.

'ஷாக்' கொடுக்க நினைத்த நயன்தாராவுக்கே 'ஷாக்' அடிக்கிறது. காப்பாற்ற வரும் விஜயும் நயன்தாராவும் மின்சார உபயத்தால் முத்தம் கொடுத்துக் கொள்வதை தியேட்டரே விசிலடித்து ரசிக்கிறது. ரொம்ப ஷாக்கிங்கான கற்பனை! 'கதவை திற, கவர்ச்சி வரட்டும்' பாலிசி நயன்தாராவுக்கு. முக்கால் மேனி சித்தராக படம் முழுக்க நட(ன)மாடி ரசிகர்களை பைத்தியம் ஆக்கியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், தேவராஜ், ஆனந்தராஜ் ஆகிய மூன்று ராஜ்களும், கால காலமாக தமிழ் சினிமா பார்த்து நைந்த டிபிக்கல் வில்லன்கள்தான்! சண்டை பயிற்சியாளரின் அதீத கற்பனை சிறு பிள்ளைகளை கவரலாம்.

ஸ்விஸ் பேங்க்கையே திறந்து வைத்து 'எடுத்துக்கோ' என்கிற அளவுக்கு செலவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். செலவையும், கதையையும் மிக்ஸ் பண்ணுகிற விதத்தில்தான் கோளாறு செய்திருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். குறிப்பாக 'நீ கோபப்பட்டு பார்த்தால்', 'ஜல்சா' பாடல்கள்! ரவிவர்மனின் ஒளிப்பதிவு அபார அழகு! அதிலும் கடலை விழுங்கிய சில கேமிரா கோணங்கள் அற்புதம். சண்டைக்காட்சிகளிலும் விஜயோடு சேர்ந்தே ரிஸ்க் எடுத்திருக்கிறது ஒளிப்பதிவு.

வில்லு- எய்தவரை விட பாய்ந்தவருக்கு ஒரு பலே!

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter