First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மாற்றுப் பாதையில் சேது திட்டத்தை செயல்படுத்த முடியுமா? பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை - தங்கக்காசு மோசடி திட்டம்: கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் தமிழக போலீசாரிடம் புகார் - பாரத மாதா நிர்வாணப்படம் வரைந்தது தொடர்பாக ஓவியர் உசேன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி - மியான்மரில் புயலுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சம் ஆனது: 5,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி இன்னும் தண்ணீரில் மிதக்கிறது - முன்னாள் அமைச்சர் தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரி உட்பட 13 பேரும் விடுதலை சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
விமர்சனம்

சாது மிரண்டா
Sadhumiranda

கிரிக்கெட் கிரவுண்டில் கிட்டிப்புல் ஆடிய மாதிரி, சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பை தடவியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பியதால், இந்த ஆக்ஷன் படத்தின் ரீயாக்ஷன் வேறு மாதிரியாக ஆகியிருக்கிறது. ஆனாலும், பிரசன்னாவின் சாது முகத்தை, வேறு முகமாக காட்டியிருப்பது ஆறுதல் ப்ளஸ் அசத்தல்!

தன் குடும்பத்தினரின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதைதான். அதை சுற்றி வளைத்து சொன்ன விதம், இதம்!

பேங்க் மேனேஜரின் குடும்பத்தில் அப்பாவியாக உள்ளே நுழைந்து, அமெரிக்காவில் இருக்கும் அப்பாசை இங்கே வரவழைக்க திட்டமிடும்போதும், காவ்யா மாதவனின் மனசுக்குள் நுழைந்து அவரை தவிக்க விடும்போதும் புரியவில்லை, ஏன் இப்படி இருக்கிறார் பிரசன்னா என்று. கடைசியில் அந்த முடிச்சை அவிழ்க்கும்போது தான் புரிகிறது, இயக்குனர் வெறும் சித்திக் அல்ல, சித்துவேலை சித்திக் என்று!

அட சாமிகளா... ஒரு ஆக்ஷன் ஹீரோவை கோழியை அமுக்குவது போல் இத்தனை காலம் அமுக்கி வைத்திருந்தீர்களே? ஸ்டைல் தாடி, ஷார்ப்பான பார்வை, அடியாட்களை அந்தரத்தில் பறக்க வைக்கும் வேகம் என்று பிரசன்னாவின் புயல் பாய்ச்சல் புதுசு, ரவுசு...! மூர்த்தி என்ற பெயரோடு மொத்த கூட்டத்தையும் குழப்பி வைக்கிறாரே, ஜாலி சபா! தைரியமாக தன் ரூட்டை மாற்றலாம் பிரசன்னா.

குளோஸ் அப் காட்சிகளில் வயசு தெரிந்தாலும், பதப்படுத்தப்பட்ட ஆப்பிள் போலவே இருக்கிறார் காவ்யா மாதவன். கோபத்தில் பிரசன்னாவின் பெட்டி படுக்கைகளை தூக்கி வெளியில் வீசிவிட்டு பொங்கி வெடிப்பது பயங்கரம். உண்மை தெரிந்து பிரசன்னாவை காப்பாற்ற துடிப்பது பரிதாபம்.

அமைச்சர் ஒருவர் இத்தனை முட்டாளாக இருப்பது தமிழ்சினிமாவின் தலையெழுத்து. ஆனாலும், கோட்டா சீனிவாசராவின் கும்மாளம் பார்க்க பார்க்க திகட்டாதது. இவர் சீரியஸாக எச்சரிக்கிற நேரம் பின்னால் இருக்கும் அடியாட்கள் பேரணி எபெஃட்டில் கோஷம் போடுவது தமாஷ்!

எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, கருணாஸ், வையாபுரி என்று சற்றே இரண்டாம் தரத்தில் இருக்கும் காமெடியர்கள். இவர்களை கொண்டு இடிச்சிரிப்பை வரவழைத்திருக்கிறார் சித்திக். இவரை மற்றுமொரு கிரேசி மோகன் என்றே பாராட்டலாம்.

அடிக்கடி எட்டிப்பார்க்கும் பாடல் காட்சிகள் படத்தின் வேகத்திற்கு போடப்பட்ட மூக்கணாங்கயிறு. தீபக் தேவின் இசையில் ஆகாயம் காணாமல், ராமனா பொறந்தாலும் பாடல்கள் இனிமை. க்ளைமாக்ஸ் மட்டுமாவது சீரியசாக இருந்திருக்கலாம்.

'சாதா' மிராண்டா!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter