ஏப்ரல் - 2012 |
30-04-2012
- நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது உச்சிதனை முகர்ந்தால் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கதைக்கான விருது அப்படத்தின் இயக்குனர் புகழேந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பாடலாசிரியராக காசி ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது, நேநிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
|
26-04-2012
- சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமா துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இதற்கு “சினிமா நூற்றாண்டு மாளிகை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவும் இரண்டாவது மாளிகைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடந்தது. திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் தலைமையிலும் செயலாளர்கள் ரவி கொட்டாரக்கரா, ஆனந்தா எல்.சுரேஷ் முன்னிலையிலும் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
|
15-04-2012
- தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து எஸ்.ஏ.சந்திரசேகர் 6 மாதம் நீக்கம்; அட்ஹாக் கமிட்டி அறிவிப்பு
|