அக்டோபர் - 2008 |
31-10-2008
- ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு கோரி இராமேஸ்வரத்தில் கண்டனப்பொதுக்கூட்டத்தில் பேசி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான் மற்றும் அமீர் மதுரை மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
|
29-10-2008
- பழம்பெரும் நடிகை ராணி சோமநாதன்(78) காலமானார்.
|
28-10-2008
- சென்னை இந்து மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை ராதிகா கலந்து கொண்டார்.
|
28-10-2008
- பிரபல இயக்குநர், வசனகர்த்தா கோகுலகிருஷ்ணா மரணமடைந்தார்.வருஷம் 16, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்டவை அதில் சில. காசி படத்திற்கும் இவரே வசனகர்த்தா. சமீபத்தில் வந்த சாது மிரண்டால் படத்துக்கும் இவரே வசனம் எழுதியிருந்தார்.
|
25-10-2008
- இலங்கைத்தமிழர் நலன் காக்க ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசி, கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் மதுரை மத்திய சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து 300 உதவி இயக்குநர்கள் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் தமிழ் திரைஎழுத்தாளர்கள் சங்கம் சார்பாக விசு, பிறைசூடன், விசி குகநாதன் மற்றும் பலர் ஆட்சேபம் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர்.
|
24-10-2008
- ராமேஸ்வரம் கண்டனக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டனர்.
|
24-10-2008
- கோவாவில் அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா நகைபெற உள்ளது.இதில் 25 படங்கள் திரையிடப்பட உள்ளன.இந்த 25 படங்களில் கல்லூரி,காஞ்சிபுரம்,முதல் முதல் முதல் வரை,பில்லா ஆகிய 4 தமிழ் சினிம படங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கே.என்.டி.சாஸ்திரி தலைமையிலான 7 நடுவர் குழு இந்த திரைப்படங்களை தேர்வு செய்துள்ளது.
|
24-10-2008
- நடிகை சார்மி நடித்த "லாடம்" படத்தை வெளியிடுவாவதற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
|
20-10-2008
- பழம் பெரும் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் காலமானார்.
|
19-10-2008
- தமிழ்நாடு திரை இயக்குனர்கள் சங்கம், இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ஈழத்தமிழர் நலன் காக்க ராமேஸ்வரத்தில் பேரணி நடத்தினர்.பல்வேறு திரையுலக அமைப்புகள் கலந்து கொண்ட, இந்நிகழ்வில் நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
|
16-10-2008
- ஏழாவது ஆசிய திரைப்பட திருவிழாவை மும்பையில் மஹாராஷ்டிர முதல்வர் துவக்கிவைத்தார். எட்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், 20 நாடுகளை சேர்ந்த 80 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
|
16-10-2008
- ஈழத்தமிழர் நலன் காக்க நடிகர், நடிகைகள் நவம்பர் 1ந் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
|
13-10-2008
- ஈழத்தமிழர் நலன் காக்க தமிழ் திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் 21ந் தேதி உண்ணாவிரதம் மற்றும் பேரணி நடத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்கள் முடிவு செய்தனர்.
|
01-10-2008
- நடிகர் பூர்ணம் விசுவநாதன் காலமானார்.
|