நவம்பர் - 2008 |
23-11-2008
- தமிழ் ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களுக்கான இணையமாக தமிழ்ஸ்டுடியோ.காம் இணையத்தை இயக்குநர் ஞான.ராஜசேகரன் மற்றும் எடிட்டர் லெனின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
|
22-11-2008
- 39வது ஆசிய திரைப்பட விழாவை கோவாவில் நடிகை ரேகா துவக்கி வைத்தார்.
|
19-11-2008
- பிரபல பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணமடைந்தார்.
|
18-11-2008
- சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய திரைப்பட விழாவிற்கு வல்லமை தாராயோ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
|
16-11-2008
- இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் பெருவாரியாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர்.
|
12-11-2008
- பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்றார்.
|
09-11-2008
- சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே சின்னத்திரை நடிகர் நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் ஈழத்தமிழர் பாதுகாப்பிற்காக நடைபெற்றது.
|
05-11-2008
- தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்(பெப்ஸி) இலங்கைத்தமிழருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பெப்ஸி யூனியனில் இடம் பெற்றுள்ள 24 சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர். இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
|
01-11-2008
- இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடிகர் சங்கத்தினர் பெருந்திரளாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.மாலை 4 மணி அளவில் உண்ணாவிரத்தை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் பழரசம் அளித்து முடித்து வைத்தனர்.
|