Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
விமர்சனம்

வேட்டை
Mambattiyan

மேல் மருவத்தூர்னா சிவப்பு, பழனி யாத்திரைன்னா பச்சை, கன்னி சாமின்னா கருப்பு என்று ஃபார்முலாவுக்குள் குதிரையோட்டும் மக்கள்தான் நாமெல்லாம். அதைப்போலவே ஆக்ஷன்-அண்ணன் தம்பி-ஆள் மாறாட்ட மசாலாக்களுக்கும் ஒரு ஃபார்முலா இருக்குமல்லவா? அதுதான் வேட்டை!

சிறுவயதிலிருந்தே 'ஷிவரிங்' பாய்தான் மாதவன். யாராவது அடித்தால் தனது வீரத்தம்பி ஆர்யாவை கூட்டிச் செல்வார் நியாயம் கேட்க. போலீஸ் அப்பா திடீரென்று அல்பாயுசில் போய்விட, அவரது வேலையை மகனுக்கு தருகிறார்கள். நீதான்பா இனிமே இன்ஸ்பெக்டர் என்கிறது டிபார்ட்மென்ட். மாதவன் போஸ்டிங்காகி போகிற இடம் ரவுடிகளின் ராஜ்யமான து£த்துக்குடி. தடதடவென நடுங்குகிறார் மனுஷன். வேறு வழியில்லாமல் யூனிபார்ஃம் பூனைக்கு சிங்கத்தின் கர்ஜனையை டப்பிங்காக கொடுக்கிறார் தம்பி ஆர்யா. இவர் பண்ணும் அதிரடிகள் எல்லாமே மாதவன் செய்ததாக ரெக்கார்டில் ஏற, ஏரியாவே நடுங்குகிறது தொடை நடுங்கி மாதவனை பார்த்து.

அதற்கப்புறம் விஷயம் ரவுடிகளுக்கு தெரியவர, நையப்புடைக்கிறார்கள் மாதவனை. போலீஸ் வேலையே வேணாம் என்று வெறுத்துப்போகும் இவருக்கு வீரத்தை ஊட்டி நிஜ சிங்கமாக்குகிறார் தம்பி. இடையிடையே காதல், குடும்ப சென்ட்டிமென்ட், ரவுடிகளின் குளோஸ் அப் உறுமல், இவையெல்லாவற்றையும் கலந்து கட்டி நிரப்பியிருக்கிறார் லிங்குசாமி.

நடிப்பை பொறுத்தவரை ஆர்யாவுக்கு ஒரே முகம், அண்ணன் மாதவனுக்குதான் ஆறுமுகம். எனக்கிந்த வேலை வேண்டாம் என்று பதறுவதில் ஆரம்பித்து, பக்காவாக எதிரிகளை சுளுக்கெடுக்கிற வரைக்கும் விதவிதமாக நடிக்கிறார். பாடி 'ஷேப்'தான் அண்ணன் பழைய ஹீரோ இல்லை என்பதை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

ரெண்டுபேரும் வில்லன்களை தீர்த்துக்கட்டும் என்கவுன்ட்டர் ஜிவ்வென்று அதிர வைக்கிறது தியேட்டரை. இதைப்போலவே ஆக்ஷன் ரசிகர்கள் ரசிக்கிற இன்னொரு காட்சி, தனது கட்டை விரலை வெட்ட வரும் வில்லனின் கட்டை விரலை ஆர்யா காவு கொள்வது. மற்றபடி அஞ்சால் அலுப்பு மருந்தை 'ஹோல் சேல்' விலைக்கு வாங்கி வருஷம் முழுக்க தேய்த்துக் கொள்கிற அளவுக்கு 'உதைத்து' தள்ளுகிறார்கள்.

யாரை பார்த்தாலும் எரிந்து விழும் சமீரா ரெட்டிக்கு, குணத்திற்கேற்ற முகம். இவருக்கும் ஆர்யாவுக்கும் வருகிற சண்டையை தொடர்ந்து ரெண்டு பேருக்கும் ஜோடி கட்டி விடுவாரோ என்ற அச்சம் வருகிறது. நல்லவேளையாக அதை ரெண்டாவது ரீலிலேயே போக்கி நிம்மதியேற்படுத்துகிறார் லிங்கு. சமீரா, மாதவனுக்குதான் ஜோடி! தங்கை அமலாபாலுக்கும் ஆர்யாவுக்கும் நடுவில் காதல் உருவாகும் ஒரு காட்சிக்கு தியேட்டரே அம்பேலாகிறது.

கண்ணாடி இருப்பதே தெரியாமல் மேல் டவலை விலக்கி க(£)ட்டும் அமலா, பின்பு கண்ணாடி இருப்பதை அறிந்து பதறுவதும், அந்த அற்புத காட்சியை திருட்டுத்தனமாக ரசித்துவிடும் ஆர்யா அமலாவுக்கு 'தேங்ஸ்' சொல்வதையும் இளசுகள் ஏரியா திரும்ப திரும்ப ரீவைண்ட் பண்ணி ரசிக்கும். தமிழ் சினிமாவில் மிக நீண்ண்ண்ண்ட லிப் கிஸ்சுக்கும் ட்ரை பண்ணியிருக்கிறது இந்த ஆர்யா-அமலா ஜோடி.

அமலாவை ஏன் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது தமிழ்சினிமா என்கிற கேள்விக்கு இஞ்ச் பை இஞ்சாக அலசினாலும் விடை கிடைப்பேனா என்கிறது. அதுவும் சில புரோபைல் காட்சிகளில் 'ஐயே...'வாகி படுத்துகிறார் அமலா.

இன்னமும் தேரடி வீதியையும், தாவணி போட்ட தீபாவளியையும் மறக்கவே இல்லை லிங்குசாமி. அட்லீஸ்ட் டான்ஸ் மாஸ்டரை மாற்றினால் கூட வேறு ஃபிளேவர் கிடைக்கலாம்.

நீரவ்ஷா, யுவன்சங்கர்ராஜா என எல்லா பெயர்களையும் டைட்டிலில் மட்டுமே கண்டு களிக்க முடிகிறது. சாதாரண 'காபி' டிக்காஷனிலேயே, ஆக்ஷனை டிக் அடிக்கிற அளவுக்கு திறமையானவர்தான் லிங்கு. அப்படியிருந்தும் இந்த படம் சாயம் போனதற்கு யார் காரணம் என்பதை அலசி ஆராய்ந்து 'வேட்டை'யாடினால், அதே பழைய லிங்குசாமி மறுபடியும் கிடைக்கலாம் நமக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

More Reviews
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
பாலை
Fans Banners
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter