|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

துணிச்சல்

காதலிக்கிற ரெண்டு பேருமே ஒருவரை ஒருவர் கொல்ல துடிக்கிறார்கள். ஏன்? சவ சவ என்று கதை நகர்ந்தாலும், இடைவேளை “ஏன் இந்த கொல வெறி?” என்ற கேள்வியை தூண்டி விடுவதால், பிற்பாதியில் ரசிகர்கள் நகர்ந்து முன் சீட்டில் அமர்கிறார்கள். எல்லாம் காதல் படுத்தும் பாடு!

விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் அருண் விஜய், துரத்தி துரத்தி காதலிக்கிறார் ஷிவா முன்ஜாலை. நிஜமாகவே துரத்தி துரத்திதான் மக்களே! இவர் ஒரு வண்ணத்து பூச்சியை துரத்த, அது சென்று அமர்கிற இடம் முன்ஜாலின் ‘முன்’ ஜாலியில்! எக்குதப்பாக கையை வைத்துவிடும் அவர் மீது கோபப்படும் ஷிவா, கடைசியில் காதலிக்கவே ஆரம்பித்துவிடுகிறார் அருணை. இருவரும் அவுட்டிங் போகிறார்கள் ரயிலில். திடீரென்று பின்புறமாக வந்து காதலியை தள்ளிவிடுகிறார் அருண். நல்லவேளையாக பிழைத்துக் கொள்ளும் அவர், தான் காற்றின் வேகத்தில் தவறி விழுந்துவிட்டதாக நம்புகிறார். நம்மையும் நம்ப வைக்கிறார். ஆனால் தான் ஒரு சுடிதார் போட்ட சூறாவளி என்பதை ஒரு கட்(டி)டத்தில் நிருபிக்க அதிர்கிறது தியேட்டர். கட்டிட உச்சியில் இருந்து பின்புறமாக அருண் விஜயை தள்ளிவிடுகிறார். ஆரம்பமாகி விட்டது சேசிங் என்று நினைத்தால் மறுபடியும் கொர்ர்ர்ர்ர்...

ஷிவா முன்ஜால் தூக்கத்தில் உளறுவதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு நடுங்குகிறார் அருண் விஜய். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் ஒருவரையருவர் கொல்ல முயல, ஏன் என்ற உண்மையை உடைக்கிறார் வில்லன் ரமணா. ‘துரோகியே ஒழிந்து போ’ என்கிறது க்ளைமாக்ஸ்.

முகத்தில் வில்லத்தனம் எட்டிப்பார்க்க, வினாடியில் அதை காதலாக மாற்றுகிற அருண் விஜய் இப்போதெல்லாம் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது ஆறுதல். சண்டைக்காட்சிகளில் கடுமையாகவே உழைத்திருக்கிறார். காதல் காட்சிகளில் இவர் காட்டும் நெருக்கம், மார்கழிக்கேற்ற கதகதப்பு.

பத்மப்ரியாவை நினைவுபடுத்தும் முகம். நடிப்பிலும் ஒன்றும் குறை வைக்கவில்லை ஷிவா முன்ஜால். தன் அக்காவை கொன்றவர் என்று நினைத்து அருண் விஜயிடம் காட்டுகிற கோபம் நியாயமானதே. பாடல் காட்சிகளில் தாராளம் காட்டுவதால் எதிர்காலம் நிச்சயம்.

வில்லன் ரமணாவிடம் இன்னும்... இன்னும்... எதிர்பார்க்குது பொதுஜனம்.

வையாபுரியை பார்க்கும் போதெல்லாம் எரிச்சல்தான் வருகிறது. நல்லவேளையாக காப்பாற்றுகிறார் சிங்கமுத்து.

கமர்ஷியல் குடுவையில் கதையை போட்டு கலக்கோ கலக்கென்று கலக்கியிருக்கிறார் டைரக்டர் ஏ.மஜீத். அநியாயத்துக்கு துணிச்சல்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter