|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
நித்யானந்தா போன்ற போலி சாமியார்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடரும்: கி.வீரமணி - ஈரோடு கம்யூ செயலாளர் கொலை: பள்ளிபாளையத்தில் 150 விசைதறி பட்டறைகள் மூடப்பட்டது - உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர் - ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவிற்கு 2 தங்கம் - டெல்லி விமான நிலையத்தில் முழுஉடலையும் காட்டும் ஸ்கேனிங் அமைக்கப்படவுள்ளது
விமர்சனம்

தமிழ்ப்படம்

தமிழ் சினிமாவின் பில்லர்களாக விளங்கும் ஆக்ஷன், சென்ட்டிமென்ட், பஞ்ச் டயலாக் சமாச்சாரங்களை நொட்டாங்கையால் நொறுங்க நொறுங்க அடித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சி.எஸ்.அமுதன். வெட்கி தலைகுனிகிறது ஆண்டாண்டு காலமாக அதகளம் பண்ணிய ஹீரோயிசம்!

"ஆ..ஊ..ன்னா சென்ட்ரலுக்கு முன்னாடி கேமிராவ வச்சிருவியே, மெட்ராச காமிக்கணும்னா என் வூடு இல்லீயா, கூவம் இல்லீயா, மொதல்ல அத காட்டு..." -முதல் சில நிமிடங்களிலேயே இப்படி ஜாலி பண்ண ஆரம்பிக்கிறார்கள். அடுத்தடுத்த சீன்களில் அந்தல சிந்தலயாகி போகிறது மொத்த சினிமாவும். கிராமத்திலிருந்து கள்ளிப்பாலுக்கு தப்பி டவுனுக்கு வரும் ஆண்பிள்ளை சிவா, இங்கே சீன் காட்டும் பல வில்லன்களை காலி பண்ணுகிறார். யார் என்று டீம் அமைத்து தேடுகிறது போலீஸ். கடைசியில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் இந்த சினிமாவுக்கும் நமக்கும் தேவையில்லாத ஒன்று. டைரக்டரின் ஒரே நோக்கம் சிரிப்போ சிரிப்பு. ரசிகனின் நோக்கமும் அதுவே என்பதால் எல்லா சீன்களும் டேக் இட் ஈஸி.

வில்லன்கள் விரட்டி வர சுரங்க பாதையில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ சிவா, அடுத்து எப்படி தப்பிப்பாரோ என்று எதிர்பார்க்க வைத்து இடைவேளை போடுகிறார் இயக்குனர். சட்டை பையில் வைத்திருக்கும் ஒரு சின்ன மரு வை எடுத்து முகத்தில் ஒட்டிக் கொண்டு எதிர் திசையில் நடக்கிறார் சிவா. வில்லன் கோஷ்டிக்கும் தெரியவில்லை. வேண்டப்பட்ட காதலிக்கும் தெரியவில்லை இது சிவாதான் என்று. இப்படி படம் முழுக்க நக்கல் வெடி. நையாண்டி திருவிழா. ஒரு காபி போட்டு எடுத்து வருவதற்குள் பெரும் பணக்காரர் ஆகிவிடும் சிவா, தன் பெயரில் மின்சார வாரியம் அமைப்பது. மார்சுவரி திறப்பது. முதல் பிணத்தோடு ஸ்டைலாக போஸ் கொடுப்பது என்று மழுங்கிய பிளேடு கொண்டு கதற கதற கலகலப்பூட்டுகிறார். இதற்கெல்லாம் பொறுத்தமான அந்த முகத்தை இனிமேல் எப்படி சீரியஸ் ஆக பார்ப்பதாம்...

இவரோடு சேர்ந்து கொண்டு ஊர் சுற்றும் வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் மூவரும் யூத்தாம்! இவர்களுக்கு அதிகம் டயலாக் கொடுக்காவிட்டாலும், ச்சும்மா வந்து நின்னாலே பத்திக்குது ஏரியா. அதிலும் மூர்த்தி வாயை திறக்கும் போதெல்லாம் ஒரு கிராபிக்ஸ் காகம் எச்சமாபிஷேகம் செய்வது நல்ல தமாஷ்.

தன் அப்பாவை தேடி சொந்த ஊருக்கு போகும் சிவாவிடம், "பெத்த அப்பனே புள்ளைகிட்டே இப்படி கேட்க கூடாது. உன் பேரு என்னப்பா?" என்கிற பெரியார் தாசனிடம், "என் பேரு சிவா. ஆனா என்னை வைஸ் கேப்டன், அகில உலக சூப்பர் ஸ்டார், புதிய தளபதின்னெல்லாம் கூப்பிடுவாங்க" என்று சொல்லும் சிவாவிடம், "அதுக்காகதான் உனக்கு அப்பவே கள்ளிப்பால் கொடுத்து கொல்ல சொன்னேன்" என்று பெரியார் தாசன் சொல்வதை போகிற போக்கில் வந்த நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளவே முடியாது. சிந்திக்க வைக்கும் சீரியஸ் காமெடி!

சினிமா போலீசே காமெடி. இதில் இன்னும்....

பல பாடல்களில் இடம் பெற்ற அர்த்தமில்லாத வார்த்தைகளை கொண்டே அற்புதமான பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். ஒ மகசியா... அதற்கு ஏதோ அர்த்தம் இருப்பது போல சிவா-தீபா பாண்டே ஜோடி கொடுக்கும் பர்ஃபார்மென்ஸ் பப்பெர்மென்ட்!

"இங்கயிருந்து மெட்ராஸ் போற எல்லாரும் நடிகராகி சிஎம் ஆவேன்னு சொல்றதால ஊருக்கு கவர்மென்ட் நல்லது செய்ய மாட்டேங்குது" என்று அலறும் கிராம பெருசு மூலம் அழுத்தமான மெசேஜ் விட்டிருக்கிறார்கள்.

விரலு தம்பியில் இருந்து, சூப்பர் ஸ்டார் வரைக்கும்... அந்நியனிலிருந்து கிழக்கே போகும் ரயில் வரைக்கும்... ஏதோ காமெடி பண்ணியிருக்கிறார்கள் என்று நினைத்தால் அதுதான் காமெடி.

இது சீரியஸ் ஷோ ஜனங்களே...

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter