|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

ஓர் இரவு
Goripalayam - Movie

பின் சீட் ஆசாமிகள் யாராவது காதருகே தும்மியிருந்தால் கூட செத்தோம்! அப்படி ஒரு பிரசன்ட்டேஷன். ஓர் இரவு. ஒரு பேய் பங்களா. தனியாக ஒரு தேடல். தப்பித்தோம்... பிழைத்தோம்... என்று ஓடிவர வேண்டிய அந்த ஆள் தப்பிக்கவுமில்லை, பிழைக்கவும்மில்லை. இதுதான் படம். ஒரு குவாட்டரை அடிச்சிட்டு போயிருக்கணும் அவன். தப்பு பண்ணிட்டான்னு தியேட்டரில் யாரோ குரல் கொடுக்க திகிலாக சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.

டாகுபிலிம் என்ற பிரிவில் வருகிற படம். (நெய்தர் டாகுமென்ட்டரி, நார் பிலிம். ரெண்டும்கெட்டான் என்பார்கள் தமிழில்) தமிழ்சினிமாவில் முதல் முயற்சியை கைதட்டி பாராட்டுகிற பொது ஜனம் இந்த படத்தை ஓட வைத்தால் பல வித்தியாசங்கள் முளைக்கலாம். ஹ¨க்கும்... ஆக்ஷன் ஹீரோக்களின் ஷ§ இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்!

இறந்து போன நகுலன் பொன்னுசாமி ஆவியாக வந்து 'நான் எப்படி செத்தேன் தெரியுமா?' என்கிறான். நிமிர்ந்து உட்கார்ந்தால் காட்சியும் திகிலுமாக கதை சொல்ல ஆரம்பிக்கிறான் அவனே. கேமிரா பிரமாதம் என்று கடமைக்காக ஒரு வரி எழுதி வரும் திரைவிமர்சகர்கள் கூட இந்த கேமிரா டெக்னிக்கை கண்டு மிரண்டு போவது தனி சுவாரஸ்யம். வியூ பாயிண்ட் என்கிறார்கள் இந்த தொழில் நுட்பத்தை. அதாவது கதைசொல்லியின் பார்வையிலேயே படம் நகர்கிறது. நாமே நமது கண்ணால் எல்லாவற்றையும் பார்ப்பது போன்ற பிரமை! ஒளிப்பதிவாளர் சதிஷ்ஜிக்கு நமது முதல் பொக்கே!

பாரா நார்மல் இன்வெஸ்டிகேஷன் என்று சொல்லப்படும் அமானுஷ்ய ஆராய்சியாளன் ஒருவனிடம் ஒரு பேய் பங்களாவை வேவு பார்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அங்கு பேய்கள் இருக்கிறதா, இல்லையா என்று ஆராயச் செல்கிற அவன், அவற்றின் நடமாட்டத்தை அறியும் அத்தனை கருவிகளையும் பொருத்துகிறான். அதுமட்டுமல்ல, தன்னந்தனியாக அந்த வீட்டில் விழித்திருந்து எல்லாவற்றையும் கவனிக்கிறான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை தான் உணர்ந்த அனுபவத்தை டேப் ரெக்கார்டில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறான். நேரம் செல்ல செல்ல அவனுக்கு முன்பே இதே முயற்சியில் ஈடுபட்ட இருவர் அங்கேயே மரணம் அடைந்ததை அறிய முடிகிறது அவனால். இக்கட்டான நேரத்தில் அங்கிருந்து தப்ப நினைக்கும் அவன் பரிதாபமாக இறந்துவிட 'நான் எப்படி செத்தேன் தெரியுமா' என்கிற அந்த முதல் டயலாக் காட்சிக்காக காத்திருக்கிறோம் நாம். காட்டினார்களா? மண்ணாங்கட்டி! (இந்த ஒரு இடத்தில சொதப்பீட்டீங்களே மக்கா)

இடையில் ஒரு காட்சி செம திகில்! காலையில் தனது காரில் லிப்ட் கேட்ட வில்லிவாக்கம் ராமன், அர்த்த ராத்திரியில் அங்கு வந்து 'யேய்... ஒரு தடவ சொன்னா கேட்க மாட்ட...?' என்று அதட்டும்போது நடு முதுகில் மைனஸ் நாலு டிகிரி!

நகுலன் பொன்னுசாமியின் மரணத்தை பற்றி விவாதிக்கிறது ஒரு டி.வி நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்கிற நபர்கள் பேசுவதும், அந்த முக பாவனைகளும் ஏதோ நிஜமாகவே இழவு வீட்டு ஆசாமிகள் போல யதார்த்தத்தை மிளிரவிடுவது ஆச்சர்யம்.

இசையமைப்பாளர் வெங்கட்பிரபு ஷங்கர், சவுண்ட் டிராக் கம்போசர் சதிஷ்குமார் இருவரும்தான் பில்லர்ஸ் ஆஃப்த் பிலிம் தமிழ்சினிமாவின் ஸ்டீரியோ டைப் ரசிகர்களுக்காக வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்ற ஒரே காரணத்திற்காகவே படத்தில் இடம் பெற்ற அத்தனை பேருக்கும் ஒரு அமானுஷ்ய நமஸ்காரம்!

தமிழ்சினிமாவில் இந்த வகை படம் முதல் முயற்சி என்பது போலவே படத்திலும் மூன்று இயக்குனர்கள். முறையே ஹரி ஷங்கர், ஹரிஷ் நாராயண், கிருஷ்ண சேகர். மூவருக்கும் பாராட்டுகள்.

ஓர் இரவு- தமிழ் பட வரிசையில் பெருமை மிகு வரவு!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter