Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
விமர்சனம்

மோதி விளையாடு
Manjal veyil

ஒரே நாள் ராத்திரிக்குள் ஓட்டாண்டியாக்கி தெருவோரம் வீசப்படுகிறார் வினய். அதுவரைக்கும் அனுபவித்த கோடீஸ்வர வாழ்க்கை அப்பளமாக நொறுங்கிப் போக, உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடவும் வேண்டியிருக்கிறது. ஓட்டாண்டியாக்கியது அப்பா. ஓட ஓட விரட்டுவது அப்பாவின் தொழில் முறை எதிரிகள். "ஏம்ப்பா இப்படியெல்லாம் நடக்குது?" என்று அப்பாவிடம் கேட்கும் வினய்க்கு கிடைக்கிற பதில், "அடேய், நான் உன்னோட அப்பாவே இல்லை. நீ என்னோட பினாமி மகன்" அப்பாவின் பதிலில் டப்பாவாகிப் போகிறார் வினய். கோடீஸ்வரர்களில் வாழ்க்கையில் நடக்கும் கோக்கு மாக்கான உறவுகள் பற்றிய கதை இது.

அந்த கோடீஸ்வர அப்பா கலாவன்மணி. வினய்யுடன் ஹவுஸ்மெட்டாக தங்கியிருக்கும் யுவாதான் அவரது ஒரே மகன். யுவாவின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதற்காகவே வெளியுலகத்திற்கு வினய்யை மகன் என்று சொல்லி வருகிறார் கலாபவன். போட்டுத்தள்ள வருபவர்கள், யுவாவை விட்டுவிட்டு வினய்யைதான் குறி வைப்பார்கள் என்பது மணியின் யூகம். எல்லாம் சரிதான். குறி தவறி இறந்தது யுவா ஆயிற்றே. இது புரியாத எதிரி கூட்டம் தொடர்ந்து வினய்க்கு குறி வைக்க, நான் உசிரோட இருக்கணும். அதுக்காகவாவது நான் உங்க பிள்ளை இல்லை என்று சொல்ல வற்புறுத்துகிறார் வினய். அவர் நினைத்தது நடந்ததா? க்ளைமாக்ஸ்.

வினய்க்கு மீண்டும் ஒரு ஜீவா மாதிரி கிடைத்திருக்கிறார் சரண். ஒவ்வொரு பிரேமையும் ஸ்டைலிஷ் ஆக உருவாக்கியிருப்பதும், காஜலுக்கும் இவருக்குமான காதலை ஜுகல் பந்தியாக பரிமாறியிருப்பதும், ஜீவ(£)னுள்ள டச்! தனது காரை விபத்துக்குள்ளாக்கிய காஜல் அந்த காருக்கான செலவை (சுமார் மூன்று லட்சம்) கழிக்க இவர் வீட்டில் வேலைக்காரியாக சேருகிறார். குலோப் ஜாமூனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு விட்டத்தை பார்ப்பதா வேலை? உள்ளுக்குள் உருகினாலும் வெளியில் வெயிலாக கொதிக்கிறார் வினய். இவரை வெறுப்பேற்ற மயில்சாமியிடம் போனில் ஜொள்ளுகிறார் காஜல். (இது தியேட்டரையே கலகலப்பாக்கும் தனி ஆவர்த்தனம்)

காஜல் எண்பது லட்சம் கேட்கிறராமே? கொடுத்தாலும் தப்பில்லை. அவ்வளவு அழகு. துறுதுறுப்பு. கோடம்பாக்கத்தை தவிக்க விட்டுட்டு போயிராதம்மா...

அமுதமா நினைச்சுதான் தமிழ் பழகியிருக்கார் வினய். ஆனால், சுண்ணாம்பு அதிகமான வெற்றிலை பாக்காக மாறி நாக்கு, காதெல்லாம் ஒரே த(டி)ப்பு. ஆனாலும் விலகாத சாக்லெட் பாய் இமேஜ் ப்ளஸ்! இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் யுவா, துடிப்பான புது வரவு. வெல்கம் வாத்தியாரே!

ஒரு சீன் வந்தாலும், உலுக்கி எடுக்கும் மயில்சாமி இந்த படத்தில் ரகளை கட்டுகிறார். காஜல் அகர்வாலே தன்னை காதலிப்பதாக நினைத்து இவர் அடிக்கிற கூத்து, சரியான காமெடி ஃபெஸ்டிவெல். அதிலும் ஃபுல் மப்பில் ரயில் என்று நினைத்து மேல் பர்த்தில் படுத்துக் கொள்கிற அந்த காட்சி, உற்சாகம்ப்பா...! சந்தானத்தில் அலட்சிய பேச்சு ஒவ்வொன்றுக்கும் அதிரி புதிரியாகிறது தியேட்டர்.

"மொத்தத்துல உண்மையை சொல்லணும்னா நான் ஒரு பொய்" -வசனம் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதை உரக்கவே சொல்கின்றன ஒவ்வொரு வரிகளும். ஹரிஹரன்-லெஸ்லி பாடல்களில் எல்லாமே இனிமை.
இந்த மோதல் விளையாட்டில் சரணின் பலம் அம்பலம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
பாலை
Fans Banners
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter