|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
விமர்சனம்

குரு என் ஆளு
Guru En Aalu

விவேக் குட்டிய பார்க்கவாவது ஒரு தடவை தியேட்டருக்கு போயிருங்கப்பு. யார் யாரோ பொம்பளை வேஷம் போட்ட தமிழ்சினிமாவில் விவேக்கின் பொம்பளை வேஷம், கிர்ர்ர்ர்ர்ர்! படத்தை து£க்கி நிறுத்துவதும் அவர்தாங்கிறதாலே முதல்ல அவருக்கு ஷொட்டு. பிறகுதான் மற்றவங்களுக்கு லட்டு!

'மாமா'தவன்னே சொல்லலாம் மாதவனை. அப்படியரு எக்குதப்பான கேரக்டர். தான் காதலிக்கிற பொண்ணை, தன்னுடைய 'பாஸ்' அப்பாசுக்கு விட்டு தர்ற வேலை! இந்த கேரடர்லே நடிக்க கூப்பிட்டா எந்த ஹீரோவும் 'ஆள விடுங்கடா'ன்னு ஓடிப் போவாங்க. மாதவனின் துணிச்சலுக்கு ஒரு பலே. எப்படியாவது கம்பெனி எம்.டி ஆகிடணும்னு நினைக்கிற மாதவன், தனது காதலி மம்தா மீதே கண் வைத்து, பிறகு கை வைக்க நினைக்கும் அப்பாஸ¨க்கு துணை போகிறார். (இத்தனைக்கும் ஏற்கனவே திருமணமானவர் அப்பாஸ்) ஆனால், காதலியையும் சேஃப்ட்டியாக தள்ளி வைக்கிறார். ஒவ்வொரு முறை சிங்கம் கூண்டுக்குள் போகும் போதும் மானை காப்பாற்ற மாதவன் செய்கிற முயற்சிகள் அனைத்தும் வயிற்றை கலகலப்பாக்குவதால், இது சீரியஸ் படமில்லே, காமெடி பீஸ்டா என்று நாமும் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறோம்.

வெறும் நடிப்பில் மட்டுமல்ல, தோற்றத்திலும் காமெடியாக தெரிய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். மாதவனின் ஹேர் ஸ்டைலும், கோட்டும் அந்த எண்ணத்தில் கொஞ்சம் ஆறுதல் தெளிக்கிறது.

மம்தா அழகோ அழகு. கற்புள்ள பெண்டிர் செய்ய தயங்கும் வேலையை இவர் அசால்டாக செய்வதால், என்னய்யா பொண்ணுங்கிற சலிப்புதான் முதல்ல வருது. ஆனால், மாதவனை மறக்கவும் முடியாமல் அப்பாசுடன் சேரவும் முடியாமல் அவர் தவிப்பதும், பிறகு மாதவனின் கனவை நிறைவேற்ற தன்னையே தர முன்வருவதும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா. அதற்காக சாப்பிடாமல் விரதம் இருக்கும் அம்மா, மம்தா வந்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பதெல்லாம் ஓவர்.

பொதுவாகவே ரிட்டையர் ஆகிவிட்டார் என்று நம்பப்பட்ட அப்பாசுக்கு இது உயிர் தண்ணீ ஊற்றுகிற படம். அழுத்தமான வேடம். அசால்டாக நடித்து தள்ளுகிறார்.

மறுபடியும் விவேக்கிடமே வருவோம். தனது ஆன்ட்டி என்று விவேக்கை அப்பாசின் மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் மாதவன். இவர் ஆண் என்றே தெரியாமல் ரூட்டு போடுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். இரண்டு பேரும் அந்த கால டிஎம்எஸ், பி.சுசீலாவாகி அடிக்கிற ரகளையில் தியேட்டரே துவம்சம். கொஞ்சம் அந்த பக்கம் திரும்புங்க டார்லிங் என்று ராட்சசத்தனமாக ஒரு ஓட்டம் ஓடுகிறாரே, "விவேக்... பிடிங்க ரசிகர்களின் பத்மஸ்ரீயை!"

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் வெளிநாட்டை ஜன்னலை திறந்து பார்க்கிற ஃபீலிங். இசை ஸ்ரீகாந்த் தேவாவாம். ஆர்மோனிய பொட்டிக்கு அல்சர் போலிருக்கு!

வாலு முளைச்ச ஆளுங்க...

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter