|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

திருதிரு துறுதுறு

கத்தியின்றி ரத்தமின்றி கதை பண்ணும் இயக்குனர்களுக்கு மவுண்ட் ரோடில் சிலை வைக்கலாம் என்றால் முதல் மரியாதை நம்ம நந்தினிக்குதான். அஜ்மல் இருக்காரு. ஆனால் ஃபைட் இல்லே. ஜோடி இருக்கு, ஆனால் லவ் இல்லே. இப்படி இருக்கு- இல்லே விளையாட்டில் ஒரு மெடலே வாங்குகிறார் புதுமுக இயக்குனர் நந்தினி. ரெட் கார்ப்பெட் ரெடியா இருக்குங்க மேம்...

விளம்பர ஏஜென்சி நடத்தும் மௌலிக்கு அவரது சரிவை து£க்கி நிறுத்துகிற மாதிரி ஒரு விளம்பர வாய்ப்பு கிடைக்கிறது. அழகான குழந்தை ஒன்று விளம்பரத்திற்கு கிடைத்தால் எல்லாம் ஓகே. குழந்தை கிடைத்தாலும், கடைசி நேரத்தில் சொதப்பலோ சொதப்பல். வரவேண்டிய குழந்தை ஆப்சென்ட். வேறு வழியில்லாமல் வேறொரு குழந்தையை கொண்டு வரும் அஜ்மல், அது கடத்தல் குழந்தை என்றும், ஒரிஜனல் அப்பா அம்மா யாரோ என்பதும் தெரியவர, பெற்றோர்களை தேடி அலைகிறார். அக்ரிமென்ட்டில் குழந்தையின் பெற்றோர் கையெழுத்து இருந்தால்தான் வீட்டை அடமானம் வைத்து எடுக்கப்பட்ட விளம்பரமே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலைமை. அஜ்மலும், ரூபாவும் அலையோ அலையென்று அலைய, கதை பாண்டிச்சேரி எல்லையையெல்லாம் தொட்டுவிட்டு சென்னைக்கு திரும்புகிறது. நல்லவேளை, நிதானமான க்ளைமாக்ஸ்.

அஜ்மலுக்கு எப்பவும் லேட்டாக வந்து சமாளிக்க வேண்டிய கட்டாயம். விளம்பர ஏஜென்சிக்கு டெமோ சிடி காண்பிக்கிறேன் என்று வேறொரு சி.டி யை போட்டுவிட்டு முழிக்கிற போது டைட்டில் பளிச். தனது அபார்ட்மென்ட்டுக்கு குழந்தையையும், ரூபாவையும் அழைத்து வந்து மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் போது தியேட்டரே குலுங்குகிறது. பொக்கே மாதிரி பொண்ணை பக்கத்தில் வைத்துக் கொண்டு, முனி மாதிரி மொக்கை போடுவதுதான் சப்!

குளோஸ் அப்பில் அபர்ணாவை நினைவுபடுத்தினாலும், நடிப்பில் தனி ஸ்டைல் காண்பிக்கிறார் ரூபா. ஏழு முப்பத்திரெண்டு ஆச்சு என்று துல்லியமாக பர்பெக்ஷன் காட்டும் அவரது பாத்திரம், நேர்த்தி, நிறைவு. இருவரும் சேர்ந்து கடத்தல்காரிக்கு கொடுக்கிற டார்ச்சர், இந்திய சினிமா இதுவரை பார்த்திராத பயங்கரம்.

க்ளைமாக்சில் த்ரில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில அல்லக்கைகளும், அந்த குறுந்தாடியும்! போலீஸ், சேசிங் என்று பழக்கப்பட்ட பாய்ச்சல்தான். நல்லவேளை... வேடிக்கை பாதி, விளையாட்டு மீதின்னு முடியுது அவங்க சேசிங்.

பெண்டாட்டி பெயரை கூட மறந்துவிட்டு நிமிஷத்துக்கு ஒரு பெயர் சொல்லி அழைக்கும் மௌலி நிறையவே ரசிக்க வைக்கிறார். எல்லாரையும் து£க்கி சாப்பிடுவது அந்த அழகு குழந்தைதான். பல காட்சிகளில் கேஷ§வலாக விட்டிருக்கிறார்கள். அதுவே பெயிண்ட்டிங் போல மனதில் பதிகிறது.

விறுவிறு என்று சொல்ல முடியாவிட்டாலும், திருதிருவென்று தவிக்க விடவில்லை நந்தினி...

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter