|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
விமர்சனம்

தம்பிவுடையான்

தண்ணீருக்காக தத்தளிக்கிற தஞ்சை ஜில்லாவையும், அந்த மாவட்ட மக்களின் தாகத்தையும் தில்லாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜா மகேஷ். (பிடியுங்களய்யா ஒரு கிளாஸ் காவேரி வாட்டர்!) கரையோர மக்களை அக்கறையோடு பார்க்கும் அவரது சமூக பொறுப்புக்கு ஒரு சல்யூட்!

காதலும், கடலையுமாக திரியும் ஒரு கல்லு£ரி மாணவன், கடமையுணர்ச்சியோடு காவிரியை தஞ்சைக்கு கொண்டு வருவதே கதை. முதல் ரீலிலேயே மெயின் கதையை தொட்டு விடும் இயக்குனர் அப்புறம் காதல் என்று டிராக் மாறுவதுதான் அய்யே... ஆனால், விறுவிறுப்பாக இழுத்துச் செல்லும் திரைக்கதைகாக ஒரு ஆஹா போடலாம்.

சக மாணவி மனிஷா சட்டர்ஜியை காதலிக்கும் புதுமுகம் ஆதித்யா அன்பு, ஊராட்சி தலைவர் நிழல்கள் ரவியின் மகன். இளவயது குறும்புகளோடு திரியும் அவனை, கண்ணெதிரிலே நடக்கும் வறுமை தற்கொலைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. காவிரியில் தண்ணீர் வந்தால் வறுமை ஒழியும். ஆனால் அதற்கு வழி? "தண்ணி குடுன்னா உடனே கொடுத்திருவானா? மத்திய அரசுக்கு நாம சொல்லணும். அவங்க கர்நாடகாவுக்கு சொல்லணும். அவன் கேட்கணும். இவ்வளவு பிரச்சனை இருக்குய்யா அதிலே" என்று யதார்த்தத்தை சொன்னாலும் வில்லன் வில்லன்தானே? மந்திரி தண்டபாணி மல்லுக்கு நிற்கிறார். ஹீரோவுக்கும் அவருக்கு நேரடி வார். யார் ஜெயிப்பார்கள் என்பது சொல்லியா தெரியணும்? மந்திரி மனைவியை கடத்தி, மாறி மாறி கத்தி குத்து வாங்கி, பல நு£று பேரை வெட்டி சாய்த்து கடைசியில் காவிரியை வரவழைக்கிறார் ஹீரோ. (தான் ஒரு புதுமுகம் என்ற கூச்சமே இல்லாமல் ஏராளமான கத்தி குத்துகள் வாங்கியும் எறும்பு கடித்தது போல அவர் எழுந்து வருவதெல்லாம் டூமச் இயக்குனரே)

வசனங்களை ஆங்காங்கே கபளிகரம் செய்திருக்கிறது சென்சார். ஆனாலும், தப்பி வந்த வசனங்களில் குத்தீட்டியின் கூர்மை. காவிரி பிரச்சனையை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே புரிகிற மாதிரி வி.சி.குகநாதன் மூலம் சொல்ல வைத்திருக்கிறார் டைரக்டர்.

புதுமுகம் ஆதித்யா அன்புவிடம் நிறைய மெச்சூரிடி. முதல் படத்திலேயே நம்பிக்கையை விதைத்திருக்கிறார் தம்பி. மிட் ஷாட்டில் மின்னுகிற ஹீரோயின், குளோஸ் அப்பில் அதிர வைப்பதுதான் ஐயோடா... புரட்சி பேசும் இளமாறன் கேரக்டர் வெகு சீக்கிரத்தில் மனதை கவ்விக் கொண்டாலும், ஒன்றரையணா சமாச்சாரத்தையெல்லாம் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவதுதான் அலுப்பு. மந்திரியின் காவேரி பேச்சை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். சி.எம் கூட அதுபற்றி மந்திரியிடம் கேட்கிறார். ஆனால், அது குறித்த தாக்கம் மக்களிடம் பரவியதாக ஒரு டயலாக் கூட இல்லாதது ஏமாற்றம்.

'நம்ம தாத்தா' என்ற உணர்வை தருகிறார் சாருஹாசன்.

நீள நீளமான காட்சிகள். வேகத்தை குறைக்கும் டூயட்டுகள். (எடிட்டரும், இசையமைப்பாளரும் கர்நாடகா ஆளுங்களோ?) ஆனாலும், அந்த குத்துப்பாட்டும் டான்ஸ் கம்போசிங்கும் அமேசிங் வாத்தியாரே...

தம்பிவுடையான், தடைக்கு அஞ்சான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter