அகழ்வாராய்ச்சி டிபார்ட்மென்ட் பீரோவிலிருந்து எடுக்கப்பட்ட அரத பழசான பிளாஷ்பேக். பூ விற்று, வண்டி துடைத்து தன் அண்ணன்கள் மூன்று பேரையும் படிக்க வைக்கிறான் சிறுவன். (அப்பாவின் கடைசி ஆசையாம்) டாக்டர், வக்கீல், போலீஸ் என்று பொறுப்புக்கு வரும் மூவரும், ஒண்ணாம் நம்பர் கேடிகள் ஆகிறார்கள். தம்பிக்கு ரத்தம் கொதிக்கிறது. அண்ணன்களை என்ன செய்கிறார் என்பது மீதி.
தயிர் வடையில் வெங்காயம், கறிவேப்பிலையை து£வுவது ஓட்டல் ஸ்டைல். வெங்காயம் கறிவேப்பிலையில் தயிர் வடைகளையே து£க்கி போடுவது ஷக்தி சிதம்பரத்தின் ஸ்டைல் போலிருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, மும்தாஜையும் சேர்த்து நான்கு இளசுகள். படத்தில் வரும் கிழவிகளுக்கு கூட 'மாராப்பு' மக்கர் பண்ணுகிறது.
இடைவேளை ட்விஸ்ட்டில்தான் படமே துவங்குகிறது. ரஜினியின் மாஸ்க்கை எடுத்து மாட்டிக் கொள்ளாத குறைதான். மற்றபடி விஷ்ஷ§க் விஷ்ஷ¨க் என்று ரஜினியாகவே மாறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். தனது தம்பிகளை கேண கிறுக்கன்களாக மாற்றும் அவரது செல்போன் ரவுசுகளை ரசிப்பதை விட, சைதை சத்யாவாக வரும் மும்தாஜின் டயலாக்குகளுக்கு தியேட்டரே கொல்லென்று கும்மாளமிடுகிறது. ஆ...ஊ... என்றால் புடவையை சைசாக து£க்கிக் கொண்டு அவர் கர்ஜிப்பது பயங்கரம்.
அவரையே கோவில் திருவிழாவில் கொஞ்ச டிரஸ்சோடு இறக்கிவிடுகிற லாரன்ஸ், அப்படியே பதவிக்கும் வேட்டு வைப்பது பயங்கர சுவாரஸ்யம். இன்னொரு பக்கம் தனது அண்ணன் போஸ் வெங்கட்டை போலீஸ் வேனோடு சேர்த்து பொக்லைனில் தொங்க விடுகிற காட்சிக்கு தியேட்டரே கலகல! கல்யாண வீட்டில் அய்யரின் அக்கினி கரண்டியிலிருந்து, சமையல் கட்டின் சாம்பார் கரண்டி வரை, ஒரே அரிவாள் ராஜ்ஜியமாக இருப்பது இன்னொரு சுவாரஸ்யம்.
முதல் பாதியை மீனாட்சிக்கு குத்தகை விட்டிருக்கிறார்கள். சாம்பாரில் சர்க்கரையை கொட்டிய மாதிரி இனிப்பும், உரைப்புமாக எக்குதப்பான ருசி காட்டுகிறார். தொப்புளே கதி என்று துவண்டு போகிறார்கள் ரசிகர்களும்!
பின்பாதியில் வரும் காம்னா, ஸ்னிக்தாக்களும் மிச்சம் வைக்காமல் வாரி வழங்க, லாரியளவு சந்தோஷத்தோடு வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். கருணாஸ் கருணாஸ்னு ஒரு சிரிப்பு நடிகர் இருந்தாரே, அவரு இந்த படத்திலே இருக்காருங்கிறீங்க? மியூசிக்கும் இவர்தானாம். நல்லவேளையாக பேக்ரவுண்ட் மியூசிக்கில் ஸ்கோர் பண்ணுகிறார் மனுஷன்.
ஒரு டான்ஸ், ஒரு ஃபைட், இப்படி அடுக்கடுக்காக மாலை கோர்த்த மாதிரி ஒரு ஸ்கிரின் பிளே. அதில் பொருத்தமாக ஆங்கங்கே மிட் நைட் மிக்சிங்! போதாதா... திருட்டுப்பூனை இருட்டில் விழுந்து எதையோ தேடிய மாதிரி கிர்ரடித்து வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். அதுதானே டைரக்டரின் நோக்கமும்!
ராஜாக்களுக்காகவே உருவாக்கப்பட்ட, ராணிகளின் ஸ்பெஷல்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|