|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
விமர்சனம்

நாடோடிகள்
Manjal veyil

தமிழ் சினிமாவின் 'அகண்ட லைப்ரரி' ஆகியிருக்கிறது மதுரை. இங்கிருந்து மண்ணின் மணம் வீச மறுபடியும் ஒரு காதல் கதை. நட்பையும், காதலையும், துரோகத்தையும், சரிவிகிதத்தில் கலந்து ருசிக்க ருசிக்க ஒரு ஜுஸ் கொடுத்திருக்கிறார் (சமுத்திரக்)கனி.

காதல் படங்களின் வழக்கமான க்ளைமாக்சில் இருந்து சிந்தித்திருக்கிறார்கள். ஓடிப்போன காதலர்கள் உருப்படியாக வாழ்கிறார்களா? அவர்களை கஷ்டப்பட்டு கரையேற்றிய நண்பர்கள் படுகிற துன்பம் என்ன? வணக்கம் போடுகிற இடத்திலிருந்து கதையை யோசித்ததால், வணக்கத்திற்குரியதாக இருக்கிறது முழு படமும்.

அரசாங்க வேலை கிடைத்தால் முறைப்பெண் இலவசம்! எனவே அந்த வேலைக்காக அலையும் சசிக்குமார். சொந்த பிசினசுக்கு வங்கிக் கடன். கூடவே சின்சியர் காதல் என்று அமைதியான வாழ்க்கைக்கு ரூட் போடும் விஜய். வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரியும் பரணி. மிச்சமில்லாமல் வாழ நினைக்கும் இந்த மூவரின் வாழ்க்கையில், எச்சம் போல வந்து விழுகிறான் ரங்கா. சசிகுமாரின் நண்பன். காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயலும் இவனை காப்பாற்றி, இவன் காதலையும் வாழ வைக்க கிளம்புகிறார்கள் நண்பர்கள். கோவிலுக்கு வரும் பெண்ணை அவளின் சம்மதத்தோடு கடத்தி ரங்காவுடன் அனுப்பி வைக்கிறார்கள். இந்த போராட்டத்தில் இவர்கள் இழப்பது நிறைய நிறைய. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு காதலர்களை சேர்த்து வைத்த நிம்மதியில் இவர்கள் இருக்க, அவர்களோ, காதலையும் கொச்சைப்படுத்தி, நட்பையும் அசிங்கப்படுத்துகிறார்கள். விடுவார்களா? நீதிகேட்க கிளம்புகிறது நண்பர் படை. மறுபடியும் ஒரு கடத்தல். முடிவு என்ன என்பதை இதைவிட விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? அடேயப்பா...

மூன்று நண்பர்களின் மொட்டை மாடி சங்கமம் கலக்கல். எந்நேரமும் தின்று கொண்டேயிருக்கும் முறைப்பெண் அனன்யா, விஜயிடம் "குடிச்சியா?" என்று கேட்டு விழிகளை உருட்டும் அபிநயா, இவர்களோடு இந்த மூவர் டீம் அடிக்கும் லு£ட்டி செம ரகளை. லவ் லட்டர் எப்படி கொடுக்கணும் என்று மகனுக்கு காதல் பாடம் எடுக்கும் விஜயின் அப்பா, ஒருகட்டத்தில் அவரே நேரடியாக காதலுக்கு து£து போவதெல்லாம் கலகல ஏரியா. காதலியின் அப்பாவிடம் "உங்களோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு" என்று சசிக்குமார் சொல்லும் போதெல்லாம் தெரியவில்லை, இந்த நேர்மை ஒரு கட்டத்தில் ஊமை ஆகும் என்று. இந்த கலகலப்பு இரண்டாவது பாதியில் காணாமல் போனாலும், விறுவிறுப்பு வந்து இடைஞ்சல் இல்லாமல் நம்மை க்ளைமாக்சை நோக்கி இழுக்கிறது.

முதல் பாராட்டு அபிநயாவுக்கு. இவருக்கு காதுகேட்கவும் இயலாது. பேசவும் முடியாது. குறைகளே தெரியாமல் அற்புதமாக நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த லிப் மூவ்மென்ட் கன கச்சிதம். து£க்கு போட்டுக் கொள்ள போகும் அப்பா, காதலையே பலி கேட்க, கண்ணீரோடு விட்டுக் கொடுக்கிற அனன்யாவும் பெரிய ரவுண்டு வருவார்.

தமிழ்சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு மின்னல் பரணி. அகன்ற கண்களே அசால்டாக வெளிப்படுத்துகிறது அத்தனை உணர்ச்சிகளையும். கடத்தலின் போது, காது ஜவ்வு கிழிந்து போகிற மாதிரி விழுகிற அடியும், அதன்பின் அவர் செவிடனாக திரிவதும் சிரிப்பை வரவழைத்தாலும், அடி விழுகிற அந்த கணம் 'ஹக்'கென்று அடைக்கிறது மனசை.

சசிகுமாரை பற்றி என்ன சொல்ல? தமிழ்சினிமாவின் ட்ரண்டையே மாற்றிய புண்ணியவான். இனி அறிமுக காட்சியில் எந்த ஹீரோவும் வானத்திலிருந்து குதிப்பது பற்றி யோசிப்பார்கள். பக்கத்தில் வந்து பஞ்ச் டயலாக் பேசினால் எடுபடுமா என்று கவலைப்படுவார்கள். இன்னும் இன்னும் இதே மாதிரி நடிச்சு, தமிழ்சினிமாவை தரமாக்குங்க வாத்தியாரே...!

தமிழ்சினிமாவுக்கு இன்னொரு அசால்ட் காமெடியன் கிடைத்திருக்கிறார். நமோ நாராயணன்! உள்ளுர் அரசியல்வாதி சின்னமணியாக நடித்திருக்கிறார். சாட்டிலைட்டை விட வேகமாக இருக்கிறது இவர் காட்டும் விளம்பர பம்மாத்துகள் ஒவ்வொன்றும்! வெடிச்சிரிப்பு போங்க. கரிசல் நாயகன் கலைமாமணி கஞ்சா கருப்பு என்று டைட்டில் போடுகிறார்கள். பொருத்தமோ பொருத்தம். நண்பர்களுக்கு உதவப் போய் போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிக்கொண்டு இவர் படுகிற வேதனைகள் சிரிப்பொலி.

பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி, சுந்தர் சி பாபு அசத்தியிருக்கிறார். அந்த சம்போ சிவ சம்போ பாடல், சர்ர்ர்ர்ரியான டெம்போ! எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு காதலில் பசுமை காட்டுகிறது. கோபத்தில் கடுமை காட்டுகிறது. சேசிங்கில் பதற்றம் ஊட்டுகிறது.

ஒத்த பாட்டுக்கு குத்தாட்டம், திருவிழா பாடல் என்று சுப்ரமணிபுரம் ஸ்டைலை விட்டு வர மறுத்தாலும், இதெல்லாம் கமர்ஷியல் குறித்த அச்சம் என்பதால் மறப்போம். மன்னிப்போம்.

'நாடோடிகள்' கூடாரத்துக்கு, ஒட்டு மொத்த தமிழ் சனமே வந்தாலும் அதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter