|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
விமர்சனம்

மத்திய சென்னை

சினிமாவுக்குள் சினிமா! இந்த ஃபார்முலாவுக்குள் படமெடுத்த முன்னோடிகள் எல்லாம் மீண்டும் 'கிளாப்' அடிக்க திரும்பிய சோக வரலாற்றை சட்டை செய்யாமல் துணிச்சலாக படமாக்கிய விவேகானந்த் வீரசிங்கத்திற்கு ஒரு 'கிளாப்' கட்டை... ஸாரி, ஒரு ஷொட்டு!

கனவெல்லாம் சினிமா. உணவெல்லாம் சினிமா. உணர்வெல்லாம் சினிமா என்று வாழும் ஜெயவந்த், கம்பெனி கம்பெனியாக ஏறுகிறார் கதை சொல்ல. வாய்ப்பு தரும் ஒரே தயாரிப்பாளரும் அடுத்த முறை பார்க்கும் போது போட்டோவாகிவிட, பரிதாபமாகிறது அவரது நிலைமை. நான்தான் கேமிராமேன், நான்தான் செகண்ட் ஹீரோ, நான்தான் மியூசிக் என்று வர்ணித்துக்கொள்ளும் ரூம் தோழர்கள் மட்டும் ரூமிலேயே இருப்பார்களாம். ஜெயவந்த் மட்டும் தெரு தெருவாக அலைவாராம் வாய்ப்புக்காக!

ஒரு மோதலில் ஆரம்பிக்கும் ரம்யா பர்னாவுடனான சந்திப்பு காதலில் முடிய, அவரது உதவியில் இயக்குனர் ஆகிறார் ஜெயவந்த். காதலுக்கு குறுக்கே வரும் பர்னாவின் அப்பா மகாதேவன், தந்திரமாக ஹீரோ வாழும் குப்பத்தையே லூட் அடிக்க முயல்கிறார். வார்த்தை மோதலும், வாழ்க்கை மோதலும், புஜபல பராக்கிரமும் ஒன்று சேர, பத்து கோடி கொடுத்து குப்பத்தை மீட்பேன் என்று சவால் விடுகிறார் ஜெயவந்த். செய்தாரா? இல்லையா? க்ளைமாக்ஸ்!

புதுமுகம் ஜெயவந்துக்கு ஆக்ஷன், ஆக்டிங் இரண்டும் நன்றாக வருவது ஆச்சர்யம் நம்பர் ஒன். நடன காட்சிகளில் முடிந்தவரை ஆடியிருப்பது ஆ.ந.டூ. தனது பக்திக்குரிய ஸ்கிரிப்டை மிதித்து விட்டார் என்று கதாநாயகியை பளார் விடுகிறவர், அதே பக்திக்குரிய இடத்தில் கதாநாயகியை மோதிவிட்டு வழிவது அசத்தல். கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்களின் பரிதாபத்தை படம் முழுவதும் சுமந்திருக்கிறார்.

புதுமுகம் ரம்யா பர்னாவை பார்க்கும்போதெல்லாம் தலைவிரித்தாடும் ஹீரோயின் பஞ்சத்தை உணர முடிகிறது.

படத்தில் பிரகாஷ்ராஜும் இருக்கிறார் என்பது புருவத்தை உயர வைக்கும் இன்னொரு ஆச்சர்யம். அவருக்கான ஸ்கிரிப்ட் மட்டும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிஷ்யனின் வெற்றியை கண்டு எந்த இயக்குனர்களும் பொறாமைப்படுவதில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிற டயலாக்குகள் ஒவ்வொன்றும். கடைசிவரை வெல்வெட் மனசுடனே வந்து போகிறார் பிரகாஷ்ராஜ்.

வேகமெடுக்கும் லாரிகளுக்கு ஓட்டக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது போல சார்லிக்கும் நடிப்பு கட்டுப்பாட்டு கருவி ஏதாவது இருந்தால் பொருத்தலாம். (படுத்துறார்ப்பா...) கருப்பு அங்கங்கே தன் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இசை இளையராஜாவாம்.ஹூக்கும்...

ஒளிப்பதிவாளர் கார்த்திக்ராஜா தனக்கான பொறுப்பை உணர்ந்து நடந்திருக்கிறார். தளபதி தினேஷின் ஒவ்வொரு அடியும் இடியாக இறங்கியிருக்கிறது.

மத்திய சென்னை-மழைக்கால சென்னை!

ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter