|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
விமர்சனம்

மஞ்சள் வெயில்
Manjal veyil

அக்காளுக்கு ரூட்டு போட்டு தங்கச்சிக்கு தாலி கட்ட நினைக்கிற வில்லன். அந்த தங்கச்சியை காப்பாற்றி காதலனிடம் சேர்க்க துடிக்கிற நண்பன். இந்த முக்கோண மோதல்தான் மஞ்சள் வெயில்.

பெண்ணை பெத்தவன், கண்ண கசக்கணும்னு சினிமாவும் சொல்றதுதான் பரிதாபம். நிழல்கள் ரவியோட பொண்ணு தாரிகா ஒரு சுகர் பேஷண்ட். அதையும் தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கிற ஆர்கே, தாரிகாவோட தங்கச்சி சந்தியாவை பார்த்திடுறாரு. தில்லுமுல்லு பண்ணி கல்யாணத்தை நிறுத்துறாரு. அதே முகூர்த்தத்திலேயே தங்கச்சியை கட்டி வைக்கலாமே என்று மாற்றுத் திட்டம் வகுக்கப்படுது. அதிர்ச்சியடையிற சந்தியா, பிரசன்னாவுடன் ஊரை விட்டு ஓட, நல் வரவுக்கு பதிலாக 'கொல் வரவு'ங்குது சென்னை. அடைக்கலம் கொடுக்கிற எம்.எஸ்.பாஸ்கர், ஒரு தாலிய பிரசன்னாவிடம் கொடுத்து "கட்றா தாலியை" என்று சொல்ல, "நாங்க காதலர்கள் இல்ல. ஃபிரண்ட்ஸ்"சுங்கிறாங்க சந்தியாவும், பிரசன்னாவும். பக்கத்து சீட் ஆசாமியை எழுப்பி, "கதையை ஆரம்பிச்சிட்டாங்கப்பா... முழிச்சுக்கோ" என்று சொல்கிற தைரியம் அங்கே வருது ரசிகனுக்கு.

அதன்பின் பிளாஷ்பேக். அதில் சந்தியாவும் பாலாவும் காதலிக்கிறாங்க. திடீர்னு தொலைஞ்சு போறாரு பாலா. ஃப்ளாஷ் பேக் முடிஞ்சப்புறம் மொத்த பேரும் சேர்ந்து பாலாவை தேட, கிடைச்சாரா? இல்லையா? கல்யாணம் என்னாச்சு? ஆர்கேவுக்கு தண்டனை என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்வியோடு க்ளைமாக்ஸ்.

பிரசன்னாவுக்கு தியாகி கேரக்டர். நண்பர்கள் காதலர்கள் மாதிரி பழகறது கதைக்கு திருப்பு முனையாக இருக்கு. மீசையில்லாத பிரசன்னா பார்க்க என்னவோ போலிருந்தாலும், கிடைத்த கேப்பில் எல்லாம் குறி பார்த்து வீசுகிறார் நடிப்பை. அதிலும் காதலிக்காக ஆக்சிடென்ட் ஆகி குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும்போது ரசிகனின் மனசில் ஒரு நிஜமான அச்சச்சோ!

ஓவியராக பாலா. முன்னே பின்னே தெரியாத ஆளுக்கு லிப்ட் கொடுக்காதே என்ற மெசேஜை பொட்டில் அடித்த மாதிரி சொல்வதோடு சரி. மற்றபடி மனதில் நிற்கிற மாதிரி எதுவுமே நஹி...

சந்தியா, பாலா காதலில் அந்த கோவில் மணியும் ஒரு பங்கெடுத்துக் கொள்வது டைரக்டோரியல் டச்! சொன்ன நேரத்திற்குள் மணியடிக்க சந்தியா ஓடுவதும், அதற்குள் கிரிக்கெட் பந்தை மணியில் குறி பார்த்து அடித்து சந்தியாவின் காதலுக்கு பிரசன்னா உதவுவதும், ஒரே சினிமாட்டிக் போங்க...

வில்லன் ஆர்கே! சந்தியாவுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? தாரிகாவை கொல்ல பாத்ரூமில் கரண்ட் ஷாக் கொடுக்கும்போது தாய்குலம் நெட்டி முறித்து சாபம் கொடுக்கும்! எம்.எஸ்.பாஸ்கர் பேராசிரியராக இருந்து ஆட்டோ ஓட்டுவதெல்லாம் ஓவர் சாமி. பரத்வாஜின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் இனிமை.

பேருதான் மஞ்சள் வெயில். உச்சி மண்டைய பதம் பார்க்கிற அளவுக்கு ஃபாரன்ஹீட்!

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter