First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மாற்றுப் பாதையில் சேது திட்டத்தை செயல்படுத்த முடியுமா? பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை - தங்கக்காசு மோசடி திட்டம்: கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் தமிழக போலீசாரிடம் புகார் - பாரத மாதா நிர்வாணப்படம் வரைந்தது தொடர்பாக ஓவியர் உசேன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி - மியான்மரில் புயலுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சம் ஆனது: 5,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி இன்னும் தண்ணீரில் மிதக்கிறது - முன்னாள் அமைச்சர் தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரி உட்பட 13 பேரும் விடுதலை சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
விமர்சனம்

சிங்கக்குட்டி
Singakutti

டெண்டுக்கு வெளியே தலையை நீட்டி, ஆளுங்க வந்தாச்சா? என்று உறுதி செய்துகொண்டு நாடகத்தை ஆரம்பிப்பது கூத்து கட்டுகிறவர்கள் வழக்கம். இங்கே கொஞ்சம் உல்டா. ஆளுங்க வரட்டும் என்று இடைவேளை வரைக்கும் நேரத்தை கடத்துகிறார் இயக்குனர். டைட்டிலில் தொடங்கி பாட்டும், ஃபைட்டுமாக படம் நகர்கிறது. கதைய சொல்லுங்கப்பா என்று பொறுமையிழந்து கதறுகிற வேளையில் ஒரு ட்விஸ்ட் அடித்து மேலே பறக்க ஆரம்பிக்கிறது தேடல்களும் துரத்தல்களும்.

அறிமுக நாயகன் சிவாஜி (ம்... அன்னை இல்லத்தின் மற்றுமொரு வாரிசு) கௌரி முஞ்சாலை பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார். அவரோ, மதுரை காளி மார்க் சோடா கம்பெனி அதிபரின் செல்லப்பெண். டைம் கேட்டாலே, கேட்கிற நபருக்கு நேரம் சரியில்லாமல் போய்விடும். இந்த லட்சணத்தில் காதலிக்கிறேன் என்று ஒரு வாலிபன் சொன்னால்? கோலி சோடாவை குலுக்கி அடிக்கிற மாதிரி அடிக்கிறார்கள். பதிலுக்கு ஹீரோவும் களத்தில் இறங்க, காதல் பற்றிக் கொள்கிறது முஞ்சாலுக்கும்! போலீஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி கல்யாண கனவுகளோடு மதுரைக்கு திரும்பும் சிவாஜிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அம்மா, தங்கச்சி, காதலி மூவரையும் கடத்திப் போகிற ஒரு வில்லன், செல்போனில் இங்கே வா... அங்கே வா.. என்று அலைகழிக்கிறான். கடைசியில் சிவாஜி கையிலேயே வெடிகுண்டை கொடுத்து கோவில் வளாகத்தில் வைக்க சொல்கிறான். அப்படி செய்யவில்லை என்றால், மூவருக்கும் சங்கு என்று மிரட்ட, சிவாஜி வைக்கிற குண்டை அவரே எடுப்பதுதான் க்ளைமாக்ஸ். அப்ப வில்லன்? தமிழ் சினிமாவின் வழக்கத்திற்குட்பட்டு.... பரலோகம்தான்!

ஆட்டத்தில் விஷால், ஆக்ஷனில் விஜய், என்று திரும்பிய பக்கமெல்லாம் தீப்பொறியாக பறக்கிறார் சிவாஜி. தாத்தாவுக்கு முகத்தில் இருக்கிற சதையெல்லாம் நடிக்குமாம். பேரனுக்கு? ஆனால் காதல் காட்சிகளில் இன்ப ரசம் சொட்டுகிறது. தன்னை எங்கிருந்தோ கண்காணிக்கும் வில்லன் சொல்வதையெல்லாம் கேட்டு பொறுமையிழந்து கோபப்படும் போதும், சிகரெட் பாக்கெட்டுக்குள் தங்கையின் கை விரலை பார்த்துவிட்டு திடுக்கிட்டு ஓலமிடும்போதும் பகீர்.

எந்த ஹீரோவோடு நடித்தாலும், அவரை விட இரண்டு வயது மூத்தவராக காட்சியளிப்பது கௌரிமுஞ்சாலின் சிறப்பம்சம் போலிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவர் காட்டுகிற தாராளம், ஏ.சி.தியேட்டரிலும் வியர்க்க வைக்கிறது. இடைவேளைக்கு பிறகு இவரை கட்டிப் போட்டு விடுவதால், நடிக்கவே வாய்ப்பில்லை.
(ஹேய்...விடுங்கப்பா)

எப்படியிருந்த விவேக் இப்படி ஆகிவிட்டார்? பரிதாபம்! வையாபுரியை விடவும் மிக மோசமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறார். யாராவது முட்டுக் கொடுத்தால் புண்ணியமாக போகும்.

இடைவேளை வரைக்கும் எப்படியோ? கதை சூடு பிடித்தபின் அங்கே இங்கே நகர விடாமல் கதைக்குள் ஒன்ற வைத்துவிடுகிறார் இயக்குனர். நாம் ஒருவரை நினைத்திருக்க, கடத்தியவர் அவரல்ல என்று வெளிப்படுத்தும் போது சில சபாஷ்களையும் பெற்றுக் கொள்கிறார் ரசிகர்களிடமிருந்து. மதுரையை பார்க்காதவர்கள் இயக்குனர் புண்ணியத்தில் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம். சந்து பொந்துகளை கூட, திகிலோடு வெளிப்படுத்தியிருக்கிற ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜேசேகரின் கேமிராவுக்கும் திருஷ்டி சுற்றி போடலாம்.

பிரசன்னா சேகரின் இசையில் ஐந்து பாடல்கள். ஹீரோவின் அறிமுகப்பாடல் துள்ளல்.
சிங்கம் சிங்கிளா வந்திருக்கு. உறுமலா? இருமலாங்கிறதை போக போக பார்க்கலாம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter