தாய் பகை, ஆனால் குட்டிகள் உறவாகிக் கிடக்கிறது அந்த இசை ஏரியா. ஒரு வகையில் இது அழகான தொடக்கமாக இருக்கலாம்.
இசைஞானி இளையராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும் கைகோர்த்த காலங்களில் அவர்களது வாரிசுகளான யுவன் சங்கர் ராஜாவும், கபிலனும் ஓடிப்பிடித்து விளையாடுகிற பிரண்ட்ஸ். காலம் அப்பாக்களை பிரித்துவிட்டது. ஆனால் பிள்ளைகள்?
திடீரென்று யுவனுக்கு கபிலன் போன் செய்ய, வா... சான்ஸ் தர்றேன் என்று யுவன் சொல்ல, ஹிட் ஸாங் ஒரு தயாராகிக் கொண்டிருக்கிறது. அஜீத் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்காக கை கோர்த்திருக்கிறார்கள் வாரிசுகள்.
இந்த குழந்தை மனசு பெரியவங்களுக்கு வராட்டியும் பரவால்ல. இவங்களை பிரிச்சுராதீங்க மேதைகளே...
|