காத்திருந்தவன் மோட்டார் சைக்கிளை நேற்று வந்தவன் பஞ்சராக்கியது போலதான் நடக்கிறது எல்லாமே! இளைய தளபதி விஜய் நடிக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றை 'தாண்டவம்' பட இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார்.
'என்னை பொருத்தவரை அனுஷ்கா நல்ல ஆர்ட்டிஸ்ட். அவங்களை என்னோட அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து யூஸ் பண்ணுவேன்' என்றெல்லாம் ஐஸ் க்யூப்களை அனுஷ்காவின் மீது வாரியிரைத்தார் விஜய். இந்த ப்ரிட்ஜ் திறப்பு விழா தெய்வ திருமகள் பட நேரத்தில் நடந்த விஷயம். அதோடு விட்டாரா? 'விஜய்யோடு உன்னை ஜோடி சேர்க்கிறேன்' என்று அமலாபாலுக்கும் ஆசைக்காட்டினார்.
இப்போது அவரது மந்தையிலிருந்து இரண்டு ஆடுகளுக்குமே கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்கின் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு ஷங்கர், மணிரத்னம் படங்களை தவறவிட்ட சமந்தாவுக்குதான் அந்த வாய்ப்பு போய் சேர்ந்திருக்கிறது. பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறதாம்.
பூசாரி விருப்பம் இது. முனீஸ்வரன் விருப்பம் எதுவோ? |