|
நடிகர்களின் சம்பளத்தை குறைச்சாதான் தமிழ்சினிமா உருப்படும் என்று அவ்வப்போது குரல்கள் எழும். அப்புறம் தானாகவே அக்குரல்கள் எக்ஸ்பயரி ஆகிவிடும். ஆடி மாசக் காத்து மாதிரி வருஷத்துக்கொரு முறை இப்படி வீசிவிட்டு செல்லும் மாய்மாலக் காற்றை தயாரிப்பாளர்கள் யாரும் கண்டு கொள்வதாக இல்லை.
மார்க்கெட்டில் இருக்கிற ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்தால் போதும். சம்பளத்தை சட்டுபுட்டென்று உயர்த்துகிற மனநிலை தானாக வந்துவிடுகிறது அவர்களுக்கு. ஒருகாலத்தில் அஜீத்தை வைத்து ஏராளமான படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படமே முடியவில்லை. அதற்குள் வாலு என்ற படத்திற்காகவும் சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.
முந்தைய படத்திற்கு ஆறு கோடி சம்பளம் கொடுத்த சக்கரவர்த்தி, புதிய படத்திற்கு பதினொரு கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம். இத்தனைக்கும் சிம்பு நடித்து வெளிவந்த சமீபத்திய படங்களான வானம், ஒஸ்தி ரெண்டுமே பிளாப். அப்புறம் ஏன் இப்படி?
இரும்பு மேல கோவப்பட்டு அடிச்சா சுத்தியலுக்குதான் தலைவலின்னு புரியலையோ என்னவோ! |