வெற்றி பெறும் ஒரு நிகழ்ச்சியை பார்த்து அப்படியே காப்பியடிக்கிற வித்தையை அநேகமாக தமிழ்நாட்டிலிருக்கும்
எல்லா சேனல்களும் செய்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு காப்பியில்தான் டிகாஷனாக கலந்திருக்கிறார் ரோஜா.
ஆந்திராவில் இவரது அரசியல் "யாவாரம்' படுத்துவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தார் ரோஜா. இந்த நிலையில்தான் ரோசாவின் சேவை கலையுலகத்திற்கு தேவை என்று முன்னாள் ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்துவார்களோ என்ற அச்சத்தில் மீண்டும் சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.
சின்ன சின்ன படங்களில் அவருக்கு அண்ணி அக்கா வேடங்களை கொடுக்க அச்சப்படுகிற இயக்குனர்கள் ரோஜாவை ஒற்றை பாடலுக்கு ஆட வைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் ஜி தமிழ் தொலைக்காட்சி இவரை ஜெயா டி.வி யில் வெளிவந்து கொண்டிருக்கும் 'ஜாக்பாட்' போன்றதொரு நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக நியமித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பெயர் லக்கா கிக்கா.
அறிவுபூர்வமான கேள்விகள், ஆர்ப்பாட்டமான பரிசுகள் என்று இந்த நிகழ்ச்சியில் ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும், ரோஜாவை பார்த்தவுடனேயே ஜொள் விடுகிற அளவுக்கு காஸ்ட்யூம் சமாச்சாரங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறதாம் சேனல்.
ஜாக்கெட்ல, ஜன்னலை எங்கெல்லாம் வைப்பாங்களோ தெரியலையே?