இந்த பிட் செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சினேகா வீட்டில் மேள சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். இவர் படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டுகளை
ஒழுங்காக பயன்படுத்தியிருந்தால் தாலிகட்டிய அடுத்த நிமிஷமே ஹனிமூனுக்கு பறந்திருக்க வேண்டிய ஜோடி இது. சிலரது பாதையில் பூனையை குறுக்கே விட்டு அவர்களை புலிகேசியா உறும வைக்கிறதே பலருக்கு பொழப்பு. அப்படிதான் சினேகாவையும் உறும வைத்திருக்கிறார்கள்.
'எங்க படத்தை முடிச்சு கொடுத்துட்டு அப்புறமா வெளியூர் போங்க மேடம்' என்கிறார்களாம் இந்த நேரத்திலும். 'எங்களோட ஹனிமூன் எப்போன்னே தெரியலயே' என்கிறது பிரசன்னா-சினேகா ஜோடி. கச்சேரியில தும்மல் வந்தா கைக்குட்டையால அடக்க முடியுமா? கிளம்புங்க பார்த்துக்கலாம்...
அப்படியே இன்னொரு முக்கியமான செய்தி. இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமைக்காகவே பல லட்சங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறதாம் ஒரு சேனல். அதனால் பத்திரிகை போட்டோகிராபர்களும் வீடியோ கிராபர்களும் வாங்க, சாப்பிடுங்க, வாழ்த்துங்க, கிளம்புங்க. படமெடுக்கிறதை நாங்க பார்த்துக்கிறோம் என்று கூறிவிட்டது பெண் வீடும், மாப்பிள்ளை வீடும்.