பேட்டி கவுரவமா இருந்தா பெட்டியை கட்டவேண்டிய நிலைமை வராது என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் புரிந்தே பேசுவார்கள் நடிகைகள். ஆனால் காஜல் அகர்வால் அப்படியல்ல. ஒருமுறை தனது பேட்டியில் 'என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா அல்ல' என்று சொல்லப்போக, சிங்கம் ஒருமுறை உருமி அடங்கியது. அவ்வளவுதான், 'ஸாரி...' என்று பர்சனலாக அவரிடம் மன்னிப்பு கேட்டார் காஜல்.
அது நடந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை. மறுபடியும் யாரையாவது உரும வைக்காமல் விட மாட்டார் போலிருக்கிறது. இந்த முறை தென்னிந்திய மொழிகள் அத்தனையையும் 'தொங்க' போட்டுவிட்டார் காஜல்.
இந்தி ஃபீல்டுதான் ஒசத்தி என்று அவர் பேசியதை அவ்வளவு சீரியஸாக தமிழ் ஹீரோக்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் சோகம்.
விரலே செரிக்கிற அளவுக்கு வெங்காயம் உரிச்சாலும், கடனேன்னு எடுத்துக்கறதுதானே யூத்துகளின் சுபாவம்? |