தலையீடு என்பது அடுத்தவர் மூக்கின் மேல் வடை சட்டியை வைப்பதற்கு சமம். இதை உணராமல் அத்துமீறுகிற எல்லாருக்கும் கிடைப்பது ஒரே பிரசாதம்தான். சிக்கல்!
சமீபத்தில் அப்படியொரு சிக்கலை சந்தித்து வருகிறார் தனுஷ். பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'மரியான்' பட பஞ்சாயத்து இப்போதுதான் ஏழரைக்கு சொல்லியனுப்பியிருக்கிறது. ஆலமரம், சொம்பு எல்லாம் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் போல தோன்றுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தபோது, தானே கேமிராவை கைப்பற்றிக் கொண்டு ஷாட் சொல்ல ஆரம்பித்தாராம் தனுஷ். சரி போகட்டும் என்று பொறுமை காத்த பரத்பாலா, ஒரு கட்டத்தில் தனது டைரக்டர் பட்டத்தையே இழக்க வேண்டி வருமோ என்று அஞ்சுகிற அளவுக்கு மூக்கை இடிக்க ஆரம்பித்தாராம் தனுஷ். எப்படியோ அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியது யூனிட்.
மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்தது. தனுஷுக்கு ஒரு லொக்கேஷனை சொன்ன பரத்பாலா, அங்கு வரவேயில்லையாம். சொன்ன நேரத்திற்கு அங்கு போன தனுஷ் யாரையும் காணாமல் திகைக்க, அப்புறம் நடந்ததெல்லாம் சவுண்ட் எஃபெக்ட் இல்லாத ரெஸ்ட்லிங். மாறி மாறி குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களாம் இருவரும்.
யானைக்கு முள்ளெடுக்கிறேன்னு தந்தத்தை பிடுங்கிறாதீங்க, ஜாக்கிரதையா டீல் பண்ணுங்க பரத்!
|