மேடைகள் விவாத களங்களாவது அரசியலில்தான் என்றில்லை, சினிமாவிலும் நடக்கும் என்பதை உணர்த்தியது கலியுகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா.
இதில் கலந்து கொண்ட கவிஞர் மனுஷ்யபுத்திரனை வளைத்துக் கொண்டு வறுத்தெடுத்தார்கள் கவிஞர் அறிவுமதியும், எடிட்டர் மோகனும். தமிழ்சினிமாவில் மிக நல்ல படைப்பு என்று அண்மைக்காலங்களில் பேசப்பட்ட வழக்கு எண் 18/9 படத்தை ஒரு வார இதழில் தாறுமாறாக விமர்சித்திருந்தார் மனுஷ்யபுத்திரன். அதை கண்டித்துதான் இப்படியொரு பாய்ச்சல்.
இதற்கு மல்லுக்கு நின்று அந்த மேடையிலேயே பதில் சொன்ன மனுஷ்யபுத்திரன், விமர்சனத்தை பொறுத்துக்க முடியாதவங்க எங்களை மாதிரி விமர்சகர்களை ஏன் மேடைக்கு அழைக்கிறீங்க என்றார் கோபம் வழிய.
நோட் த பாயிண்ட் கோடம்பாக்ஸ்...!
|