இம்மாதம் 22 ந் தேதி பில்லா -2 ரிலீஸ். அதுவும் விஜய்யின் பிறந்த நாளான அதே தினத்தில். இப்படியெல்லாம் புரளியை கிளப்பி பீதியை விதைத்த மீடியாவுக்கு செமத்தியான நோஸ்கட்! பில்லா ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது.
நானும் ரவுடியா ஃபார்ம் ஆயிட்டேன் என்று அஜீத்தின் ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏற முற்பட்ட 'சகுனி'யை இறக்கிவிட்டுவிட்டு அடுத்த வார ஸ்டாப்பிங்கில் வண்டியை நிறுத்தியிருக்கிறது பில்லா-2 தயாரிப்பு நிறுவனம். சகுனியும் பில்லாவும் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை.
யாருக்காக யாரும் அஞ்சவில்லை. எல்லாம் விநியோகஸ்தர்களின் வேண்டுகோள்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான படத்திற்கு முதல் வார கலெக்ஷன் என்பது மிக மிக முக்கியமான விஷயம். பெரிய படங்கள் இரண்டு ஒரே நேரத்தில் வெளிவந்தால் ஹீரோக்களுக்குள் பலபரீட்சை நடக்குமோ, இல்லையோ? நிச்சயம் விநியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் பொருத்தமட்டில் அது விஷப்பரீட்சை. இதற்காகதான் பில்லா-2 படத்தை அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போட்டார்களாம். |