விஸ்வரூபம் படத்தை பற்றிதான் இப்போது எட்டு திசையும் பேச்சு. இப்படத்தை பொறுத்தவரை நாயகி பூஜா குமாரின், பூஜைக்குமார் கமல்தான். அப்படியென்றால் லிப் கிஸ் எத்தனை இருக்கும் என்றே ரசிகர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, கமல் போடுகிற இன்னொரு கணக்கு யாரை கலக்குகிறதோ இல்லையோ? இலங்கையை கலக்கும்.
பொதுவாகவே கமல் படங்களில் காதல் இருக்கிற அளவுக்கு நாட்டை பற்றிய அக்கறையும் இருக்கும். ஈழம், கொடூர கொலைகள், அகங்காரம், அட்டூழியம் என்று நாடு முழுக்க பேரதிர்ச்சியை கிளப்பிவிட்டிருக்கும் ராஜபக்சேவுக்கு புத்திசம் சொல்லிக் கொடுத்தது இவைதானா என்றெல்லாம் பொங்கி வெடிக்கிறது உலகம். இந்த நேரத்தில்தான் கமல் தனது விஸ்வரூபம் படத்தில் சில விஷயங்களை அடக்கமாக சொல்லி, அதிர வைக்கப் போகிறாராம் இலங்கையை.
இப்படத்திற்காக பிரமாண்டமான புத்தர் சிலைகளை உருவாக்ருக்கிறார்கள். கதைப்படி அந்த புத்தர் சிலைகளை தகர்த்தெறிகிற காட்சியையும் கமல் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கருணையை சொன்ன புத்தனின் பூமி. காலரை பிடிக்குமா கமலின் கேள்வி?
|