இந்திய படங்கள் என்றால் அது இந்திப்படங்கள்தான் என்கிற நிலைதான் இருக்கிறது உலகம் முழுக்க. அப்படிப்பட்ட எண்ணத்தை அடியோடு தகர்க்கிற விதத்தில் படம் எடுக்கும் சில தமிழ்ப்பட இயக்குனர்கள் முறையாக அவற்றை உலகப்பட விழாக்களில் திரையிட்டு, 'நாங்களும் இந்தியாதான்யா...' என்று மார்தட்ட தவறுவதில்லை.
இப்படிப்பட்ட நேர் பார்வையா, அல்லது வியாபாரம் தொடர்பான கூர் பார்வையா தெரியாது. எஸ்.ஜே.சூர்யா செய்யப் போகும் ஒரு விஷயம் எல்லா 'வுட்'டுகளையும் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும். அது, இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் கரீனா கபூரை தனது 'இசை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைக்கப் போகிறாராம்.
ஒரு மினி டி.ராஜேந்தராக நம் கண் முன் அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, அவரைப்போலவே இயக்கி தயாரித்து இசையமைத்து இப்படத்தில் நடிக்கவும் செய்கிறார். 'இசை' யின் இசையும் எஸ்.ஜே.சூர்யா என்பதால், நான் ஆட வருவதற்கு முன்பாக அவசியம் முழு பாடலையும் எனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று கூறிவிட்டாராம் கரீனா. (என்னம்மே டவுட்டு?)
ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கே றெக்கை முளைக்கிற அளவுக்கு ஆர்மோனிய பெட்டியை இசைக்க விட்டுக் கொண்டிருக்கிறார் சூர்யா.
மெட்டு மும்பை வரைக்கும் கேட்குதாக்கா...?
|