'மடக்குவது எப்படி, முப்பதே நாளில் கற்கலாம்' என்று செல்வராகவன் ஒரு புத்தகம் எழுதலாம். அந்தளவுக்கு வித்தை தேர்ந்தவராக இருக்கிறார் அவர். தயாரிப்பாளர்களை அழ விடுகிற நேர்த்தியில் இவரை அடுத்த பாலா என்றே வர்ணிக்கலாம். அப்படிப்பட்டவர் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி, ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படத்தையும் எடுக்கப் போகிறாராம்.
செல்வராகவனை பற்றி இப்படி ஒரு அறிமுகம் கொடுக்க வேண்டுமா என்பவர்களிடம், சாம்பிளுக்கு ஒரு சம்பவத்தை சொன்னால் சட்டுபுட்டென்று வாயை பொத்திக் கொள்வார்கள். இரண்டாம் உலகம் படப்பிடிப்பையே இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறார் செல்வா. இப்படத்தின் ஷுட்டிங்குக்காக அண்மையில் கோவாவுக்கு போயிருந்தார் இவர். இவருடன் சுமார் 100 பேர் கொண்ட குழுவும் போயிருந்தது.
அங்கு போய் இறங்கியவுடன் செல்வா சொன்னது என்ன தெரியுமா? நான் கோவாவை பார்த்ததில்ல. அதனால் ரெண்டு நாள் எல்லாருக்கு லீவு. நல்லா சுற்றி பார்த்துட்டு அப்புறமா ஷுட்டிங் வச்சுக்கலாம்.
ரெண்டு நாள் முன்னாடி இவர் மட்டும் வந்திருந்து அந்த வேலையை செஞ்சுருக்கலாமே? 100 பேருக்கு சாப்பாடு, தங்கும் செலவு, அவுட்டோர் டபுள் பேட்டா என்று தயாரிப்பாளரின் அண்டிராயரில் ஒட்டுத்துணி போட வேண்டியிருக்காதே என்று புலம்பினாராம் யூனிட்டிலேயே வேலை பார்த்த ஒரு அக்கறை ஆசாமி. இதுதான் செல்வா.
சரி... இது சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா பிரச்சனை. நமக்கென்ன? கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது! விட்டு தள்ளுங்கப்பா... |