'என்னங்க நடக்குது இங்கே?' என்ற அதட்டலையே தனது முற்போக்கு பிற்போக்கு மற்றும் சைடு போக்கு சமாச்சாரங்களாக கொண்டிருக்கும் டக்கர் பச்சான் மறுபடியும் ஒரு முறை இதே குரலை ஒலிக்க விட்டிருக்கிறார். சாஃப்ட்வேர் இளைஞர்களை தாறுமாறாக குதறப் போகிறதாம் இவரது அதட்டல்.
தற்போது இவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'அம்மாவின் கைபேசி' படத்தில் சாஃப்ட்வேர் இளைஞர்களின் பார்ட்டி வாழ்க்கையையும் அலசப் போகிறாராம். இதையே சாக்காக வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர் இளைஞர்களுக்கென்றே கம்பியை பழுக்க பழுக்க சூடாக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.
தற்போது வெளியாகும் அநேகப் படங்களை டப்பாவுக்குள் போக விடாமல் தடுத்தாள்வது கம்ப்யூட்டர் இளைஞர்கள்தான். மாயாஜால், ஐநாக்ஸ், சத்யம் என்று கூடி எவ்வளவு விலை விற்றாலும் டிக்கெட் வாங்கி என்ஜாய் செய்யும் இவர்களின் 'மணி'யுலகம்தான் டைரக்டர்களின் கனவுலகத்திற்கு தீனி போட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, உலகம் முழுக்க நிறைந்திருக்கும் தமிழர்களும் இந்த சாப்ஃட்வேர் தொழிலில்தான் நீக்கமற குடியிருக்கிறார்கள். இந்த நிலையில் டக்கரின் இந்த விளாசல் அவரது முதுகைதான் பதம் பார்க்கப் போகிறது என்று சொன்னால் கேட்கவா போகிறார்?
|