சீமானுக்கு பெண் பார்க்கிறார்கள் என்கிற தகவல் வெளிவர ஆரம்பித்ததும் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிலும் மாவீரன் பிரபாகரனுக்கு திருமணம் நடந்த அதே திருப்போரூர் முருகன் கோவிலில்தான் இந்த திருமணம் நடக்கப் போகிறது. அவரது திருமணம் நடந்த அதே நாளில் நடக்கும் என்றெல்லாம் அடிஷனல் பிட்டுகளை அள்ளி வீசியது மீடியா.
இது குறித்தெல்லாம் அமைதிகாத்து வந்த சீமான் பொங்கி வெடிக்க ஆரம்பித்திருக்கிறார். எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று என் தம்பிகள் விரும்பியது நிஜம்தான். நானும் அதற்கு சம்மதித்ததும் நிஜம்தான். ஆனால் யார் மணமகள் என்பதையெல்லாம் இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்குள் இன்னார்தான் என்று ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிடுவது எந்த விதத்தில் சரி? அதுவும் நாத்திகனான நான் திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக கதை கட்டுவதெல்லாம் ரொம்ப தப்பு என்று ஆவேப்படுகிறார்.
ஆமாம்னு ஒப்புக் கொண்ட அண்ணாச்சி அப்படியே மணமகள் யார்னும் சொல்லிட்டா கொண்டாடிட்டு போவாங்களே தம்பிகள்... சொல்லுங்கண்ணே சொல்லுங்க! |