ஒரு ஈ யை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு பூ சுற்றியிருக்கிறார் ஆந்திரப்பட ஜாம்பவான் ராஜமவுலி. இதுவரை அவர் இயக்கிய எட்டுப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். டாப் ஹீரோக்களை நம்பி நான் இல்லை என்று சொல்லும்விதத்தில் ராஜமவுலியின் இந்த கிராபிக்ஸ் ஈ ஆகப்பெரிய வசூலை ஈட்டிவிட்டது இரு மொழிகளிலும்.
இப்படத்தின் பிரத்யேக ஷோவுக்கு தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆசை ஆசையாக அங்கு போனவர்களுக்கு ஏமாற்றம். அங்கு ராஜமவுலி வரவேயில்லை. காவடி தூக்குகிற நிலையிலா இருக்கிறார் அவர்?
அதுபோகட்டும்... லேட்டஸ்ட் நியூஸ் ஒன்று. இவர் படத்தில் நடிக்க அஜீத் உள்ளிட்ட பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின். தன்னை ஹீரோவாக்க எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் தர தயாராக இருக்கிறாராம். மவுலிதான் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார். |