நாலு பாட்டு ஹிட்டாகிட்டா போதும். சம்பளத்தை ஹீட்டாக்கறதுதான் இசையமைப்பாளர்களின் வழக்கமா இருக்கு. நடிகர், நடிகைகளிடம் இருந்த இந்த பழக்கம் இப்போது இசையமைப்பாளர்களுக்கும் தொற்றிக் கொண்டதால் கோடம்பாக்கம் ஜர்க் ஆகிக் கிடக்கிறது.
லாரன்சை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்குகிற திட்டத்திலிருக்கிறார் ராசு.மதுரவன். யாரை மியூசிக் டைரக்டரா போடணும்ங்கிற பொறுப்பை எங்கிட்ட விடுங்க என்று கூறிய லாரன்ஸ், முன்னணி இசையமைப்பாளர்கள் சிலருக்கு போன் அடிக்க, காஞ்சனா வெற்றியால் லாரன்ஸ் வீட்டின் புழக்கடையில் நோட்டுகள் கொட்டிக் கிடக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, ஒன் சி, டூ சி என்று அவரை அதிர வைத்தார்களாம் அவர்கள்.
ஏம்ப்பா... எல்லாருமா சேர்ந்து இப்படி இம்சை பண்ணினா நானே மியூசிக் டைரக்டர் ஆயிருவேன் ஜாக்கிரதை என்றெல்லாம் எச்சரித்தாராம் லாரன்ஸ். அப்பவும் ஆர்மோனியப் பொட்டிக்காரர்களின் அட்டகாசம் குறையாததால் மியூசிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் லாரன்ஸ்.
காது ரெண்டையும் கழுவி வைங்க மக்களே... லாரன்சோட மீஜிக் பின்னாடி வந்துகிட்டேயிருக்கு! |