பில்லா-2 ரிலீசுக்கு பிறகு அஜீத்தின் போக்கில் அநியாய மாற்றம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். ஒரு காலத்தில் யாராலும் ரீச் பண்ண முடியாமலிருந்த அஜீத், அவரே போன் பண்ணி பேசுகிற அளவுக்கு சிம்பிள் ஆகியிருக்கிறாராம்.
தமிழில் 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா, அப்படத்தின் தாறு மாறான ஹிட்டுக்குப் பின் தெலுங்கில் ஒரு படம் இயக்கினார். அது சுமார் ஹிட். இந்த தகவலுக்கு முன்பு வரை சிவாவுடன் தொடர்பில் இருந்த அஜீத், அதன்பின் அவரது தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். 'சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா' என்று சிவாவும் செத்த எலிகளை அடிக்க கம்பும் கதையுமாக கிளம்பிவிட்டார். இந்த நேரத்தில்தான் ஒரு அதிரடி திருப்பம்.
கடந்த சில தினங்களுக்கு முன் அஜீத் லைனிலிருந்து சிவாவுக்கு போன். ஏகப்பட்ட குழப்பத்தோடு போனை எடுத்தவருக்கு இன்ப அதிர்ச்சியாம். நாம முன்பு பேசி வைத்திருந்த கதையை இன்னும் மெருகேற்றி வைங்க. விஷ்ணுவர்த்தன் படத்துக்கு பிறகு உங்களுக்குதான் கால்ஷீட் என்றாராம் அஜீத்.
தாகத்துல தவிக்கிற நேரத்தில் காலுக்கு நடுவுல கங்கையே ஓடுன மாதிரி சந்தோஷம் சிவாவுக்கு.
யுவர் ஆனர். ரெண்டு பேரும் சேர்ந்து கோட்டு தைக்க ஆர்டர் கொடுக்க நினைச்சா அதை கோர்ட்டு மூலமாகவாவது தடுத்துரணும்... |