இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கையில் வாயை அடக்கிக் கொண்டு இருக்க முடியாதல்லவா? ஐதராபாத்திலிருக்கும் டாப்ஸி, மனோஜ்-மகத் மல்லுக்கட்டு தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் மனோஜை தன் சகோதரர் என்று குறிப்பிட்டிருப்பதால் கோலிவுட்டும் டோலிவுட்டும் பேஸ்த் அடித்துக் கிடக்கிறது.
இந்த அடிதடி தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் டாப்ஸி, இதில் என்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வருவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சீப் பப்ளிசிடிக்காகதான் இப்படியெல்லாம் எழுதி வருகிறார்கள். ஆரம்பத்தில் இதை பற்றி கண்டு கொள்ளாத நான், இப்போது பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
மோகன்பாபு சார் குடும்பத்திலிருப்பவர்கள் என்னிடம் அன்பாக இருக்கிறார்கள். அவர் என்னை மகளாகவே பார்க்கிறார். மனோஜ், மஞ்சு இருவரிடமும் நான் ஒரு சகோதரியை போலவே பழகி வருகிறேன். எனக்கும் மனோஜுக்கும் இடையே இருப்பது சகோதர சகோதரி உறவுதான். இவ்வாறு டாப்ஸி கூறியிருக்கிறார்.
நல்லாயிருக்கும்மா... எந்த படத்துல அவருக்கு தங்கச்சியா நடிக்கிறீங்க, அதையும் சொல்லிட்டா குழப்பம் தீருமே?
|