ஆளில்லாத கிரவுண்டில் ஒற்றை ஆளாக நின்று சிக்சர் மற்றும் சக்சஸ் அடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். வடிவேலு விவேக்குகளின் காமெடிக்காக யாரும் யாகம் நடத்தவும் இல்லை. அரையடி குளத்தில் நின்று வயலின் வாசிக்கவும் இல்லை.
இந்த நேரத்தில்தான் புத்திசாலித்தனமாக தனது அடுத்த குதிரையை செலக்ட் செய்திருக்கிறார் சந்தானம். இவரே தயாரிப்பாளர் ஆனதுடன், அந்த படத்தில் இவரே ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார். படத்தின் பெயர் 'கண்ணா லட்டு திங்க ஆசையா?'
தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து ஏராளமான விநியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் வாழ வைத்த ராம.நாராயணன் இப்படத்தை இயக்குகிறார். இன்னொரு ஆச்சர்யமான தகவல், இந்த லட்டு தின்கிற படத்தில் முக்கியமான ஆளாக பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசனும். (சார்தான் பைனான்ஸ் பண்றாருன்னு இன்னொரு தகவலும் உலவுது)
இதுவரை மொக்கை காமெடி பீஸாகவே அறியப்பட்டு வந்த பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் இது உருப்படியான முயற்சி. கும்பகோணத்தில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டு வரத் திட்டமாம். அதுவும் நாற்பதே நாட்களில்!
டிரைவர் சரியா அமைஞ்சாச்சு. பயணத்துல ஏது குறை? அசத்துங்க சந்தானம்... |