கரணுடன் ஜோடியாக 'கந்தா' படத்தில்தான் அறிமுகம். ஆனால் அந்த படம் இன்னும் வரவேயில்லை. அதற்குள் விஜய்யுடன் இவர் நடித்த 'காவலன்' முந்திக்கொள்ள, என்னுடைய அறிமுகமே காவலன்தான் என்று கந்தாவை எல்லா பேட்டிகளிலும் இருட்டடிப்பு செய்தார் நடிகை மித்ரா.
கரணின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?
இவர் அடுத்ததாக தமிழில் நடிக்க ஒப்பந்தமான படம் கரிகாலன். இதில் தனக்கு ஜோடியாக நடிக்க, அப்படத்தின் ஹீரோ விக்ரமாலேயே விரும்பி அழைக்கப்பட்டார். இருள் மேகங்கள் திடீரென்று சூழ, படமே 'டிராப்' என்று கூறிவிட்டார்கள் இப்போது. இதனால் 'மிஸ்டு கால்' போலாகிவிட்டது மித்ராவின் ஆசைகள்.
இருந்தாலும் விக்ரமின் கட்டுப்பாட்டு அறையில் மித்ராவின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறதாம். |