மான்கொம்பு இளைத்து மீன் முள்ளாகிவிட்டது. பரத்தின் மார்கெட் நிலவரத்தில்தான் இத்தனை சோகம்.
நின்று போன பழைய படங்களையெல்லாம் மீண்டும் உயிர் பிழைக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இப்போது. இந்த சோகத்தில்தான் இன்னொரு சோகமும் நடந்தேறியது அவருக்கு. சமீபத்தில் வடசென்னை பகுதியில் திறக்கப்பட்ட ஒரு மல்டி ப்ளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவுக்கு போயிருந்தார் பரத். இன்னொரு ஸ்பெஷல் கெஸ்ட் கமல்.
வரவேற்பு குழு, பரத்தை கண்டு கொள்ளவே இல்லை. கமல்ஹாசனுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யாத குறையாக கவனித்தவர்கள், பரத்திற்கு ஒரு கிளாஸ் வாட்டர் கூட வழங்கவில்லையாம். ஆத்திரம் தலைக்கேற பாதியிலேயே இடத்தை காலி செய்தார் பரத்.
ஜாதகத்துல கோளாறு வந்தா நிலாவையே அப்பளம்னு கிண்டலடிப்பான் தமிழன்! விடுங்க பரத்... |