கடந்த காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்வீரராக திகழ்ந்தவர் சிவசக்தி பாண்டியன். திரையுலகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் நாள் கிழமை பார்க்காமல், நள்ளிரவு து£ங்காமல் இவர் ஆற்றிய பணிகள் கொஞ்ச நஞ்சமல்ல. காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த இவர், தனது பதவி காலத்தில் தயாரிப்பாளர்களை விட்டுக் கொடுத்ததே இல்லை.
அதற்கப்புறம் ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறும்தானே? கவுரவமாக விலகிக் கொண்டார் அவர். இந்த நிலையில் பதவிக்கு வந்த எஸ்.ஏ.சி அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதற்குள் அவருக்கே நாற்காலி பிரச்சனை தலைவிரித்தாட தய £ரிப்பாளர் சங்கம் கிட்டதட்ட முடங்கிப் போய்விட்டது.
நலிவுற்ற தயாரிப்பாளர்களுக்கு கிடைத்து வந்த சிறுசிறு உதவிகள் கூட இல்லாமல் போய்விட்டது. இந்த குழப்பங்கள் எதிலும் தலையிடாமல் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் அர்ஜுனன் காதலி படத்தில் பிஸியாகிவிட்டார் சிவசக்தி பாண்டியன்.
இவரது கலையுலக பணிக்கு கவுரவம் சேர்க்கும் விதத்தில் சிவசக்தி பாண்டியனை சென்சார் போர்டு உறுப்பினராக்கியுள்ளது மத்திய அரசு. அங்கும் அவர் தயாரிப்பாளர் நலன் குறித்து மட்டுமே யோசிப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? |