குட்டியை சுமந்த கங்காரு குப்புற விழுந்தால் என்னாகும்? அப்படிதான் ஆகிறது சில நடிகைகளால் சில தயாரிப்பாளர்களின் நிலைமை.
முதல் நாள் ஷுட்டிங்கிற்கு 'பிளாங்க்' ஆக வரும் நடிகை படம் முடிவதற்குள் ஆயிரம்
கிசுகிசுக்களில் சிக்குவார். அதில் பாதி டுபாக்கூர் நியூஸ் என்பது டைரக்டருக்கும் தெரியும். தயாரிப்பாளருக்கும் புரியும். ஆனால் நிஜ லவ்வில் சிக்கும்போதுதான் முனியாண்டிக்கு நேர்ந்துவிட்ட ஆடு போல திருதிருவென முழிக்க ஆரம்பிப்பார்கள் இவர்கள்.
எந்த நேரத்தில் ஓடிப்போவாரோ, படம் திரைக்கு வரும்வரை கல்யாணம் செய்து கொள்ளாமலிருந்தால் கடவுள் புண்ணியம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிதான் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது ஒரு இந்திப்படம். மாட்டிவிட்டவர் ஜெனிலியா.
இவர் நடித்த இட்ஸ் மை லைஃப் என்ற படம் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் காதலில் விழுந்து தொலைத்துவிட்டார் ஜெனிலியா. இதோ- கல்யாணம் வரைக்கும் கூட முன்னேறிவிட்டார். படம் வெளிவருவதற்குள் கல்யாணம் முடிந்துவிட்டால் என்னாவது? அணில் கடித்த பழத்தை எந்த ரசிகனும் விரும்புவதில்லையே.
இத்தனை மாதங்களாக ரிலீஸ் விவகாரத்தில் கொஞ்சம் சோம்பேறியாகவே இருந்த இந்த தயரிப்பாளர் இப்போது விழுந்தடித்துக் கொண்டு ரிலிஸ் வேலைகளில் இறங்கிவிட்டாராம்.